• search
திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்.. பனைமரத்துடன் நசுக்கி கொலை.. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

Google Oneindia Tamil News

திருவாரூர்: நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண்ணை, பனைமரத்துடன் சேர்த்து உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண் ஜெயபாரதி... திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. இவரது கணவர் பெயர் விஷ்ணு பிரகாஷ்.. அமெரிக்க மாப்பிள்ளை.

 அடுத்த 3 மணி நேரத்திற்கு.. இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் தகவல் அடுத்த 3 மணி நேரத்திற்கு.. இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் தகவல்

கடந்த 2005-ல் இவர்களுக்கு கல்யாணம் ஆகி உள்ளது.. அப்போது முதல் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர்.. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 பிரச்சனை

பிரச்சனை

ஆனால், கணவனுடன் ஜெயபாரதிக்கு கருத்து வேறுபாடு ஏதோ பிரச்சனை வந்துள்ளது.. அதனால், 3 வருஷத்துக்கு முன்பு, சண்டை போட்டுக் கொண்டு அமெரிக்காவில் இருந்து, திருவாரூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்... சொந்த ஊரிலேயே, அஞ்சல் துறையில் தற்காலிகமாக ஒரு வேலையும் பார்த்து வந்தார்.

வேன்

வேன்

இந்த நிலையில் ஒருநாள் வீட்டுக்கு வேலை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வேன் ஒன்று ஜெயபாரதி மீது மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், திடீரென இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.. இது விபத்து அல்ல, கொலை என்று ஜெயபாரதியின் அண்ணன் போலீசாரிடம் புகார் தந்தார்.

 சந்தானம்

சந்தானம்

நடிகர் சந்தானத்துக்கும் இந்த விஷயம் பறந்தது.. இதையடுத்து, மாவட்ட எஸ்பியின் கவனத்துக்கும் கொண்டு சென்றார் சந்தானம்.. உடனடியாக மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அப்போதுதான், சந்தேகப்பட்டபடியே இது கொலை என்று தெரியவந்துள்ளது... அதற்கான ஆதாரங்களும் சிக்கியது.

 அம்மா வீடு

அம்மா வீடு

தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், அடிக்கடி தகராறும் இருந்து வந்துள்ளது.. அப்போது "அம்மா வீட்டுக்கு போ" என்று கணவர்தான் துரத்தி விட்டுள்ளார்.. இதனால், விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்த ஜெயபாரதி, விஷ்ணுபிரகாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. இதனால், விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது... இதுதான் விஷ்ணுபிரசாத்துக்கு ஆத்திரத்தை கிளப்பி, ஜெயபாரதியை கொல்லவும் முடிவு செய்ய காரணமாக இருந்துள்ளது. தன்னுடைய சொந்தக்காரர்கள் ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ய முடிவு செய்தார்.

லாரி

லாரி

அதன்படி, சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால், கேஸை முடித்துவிடுவார்கள் என்று எண்ணி, பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்து வாங்கி உள்ளனர்.. பிரசன்னா என்பவரை டிரைவராக வேலைக்கு வைத்துள்ளனர்.. ஒருநாள் முழுக்க ஜெயபாரதியை லாரியிலேயே ஃபாலோ செய்துள்ளார் பிரசன்னா.. பிறகுதான் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு ஜெயபாரதி வந்து கொண்டிருக்கும்போது, பலமாக மோதியதுடன், அங்கிருந்த ஒரு பனைமரத்துடன் ஜெயபாரதியின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொண்டே இருந்துள்ளார்..

 சந்தானம்

சந்தானம்

இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, டிரைவர் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராஜா, ஜெகன், ஆகியோர் எஸ்கேப் ஆகி இருந்ததால், அவர்களையும் கைது செய்திருந்தனர்.. தற்போது, தீவிரமான முயற்சிக்கு பிறகு, செந்தில்குமாரை கைது செய்துள்ளனர்.. இந்த கொலையில் இவர்தான் மூளையாக செயல்பட்டவர்.. இவர் விஷ்ணுபிரகாஷின் மைத்துனர் ஆவார்.. சமீப காலமாக இவர் கொரோனா சிகிச்சையில் இருந்தால், போலீசாரால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.. இப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதால், அவரை கைது செய்தனர்

நடவடிக்கை

நடவடிக்கை

மேலும் அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபிரகாஷையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்... அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் இது சம்பந்தமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சந்தானம் போலீசுக்கு தந்த அழுத்தத்தின் காரணமாகவே இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது!

English summary
Actor Santhanams relation woman Jayabharathi murder case and four arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X