திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. எஸ். காமராஜ் மீது தினகரனுக்கு எவ்வளவு நம்பிக்கை.. திருவாரூரின் அமமுக வேட்பாளர் இவர்தான்!

திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    AMMK Candidates List: அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்- வீடியோ

    திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

    தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. 9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜகதூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

    ஒரு கேள்வி

    ஒரு கேள்வி

    தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில், திருவாரூர் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாரை வேட்பாளராக நிறுத்த போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. அதிமுக, திமுகவை எதிர்த்து அமமுக சார்பாக யார் நிற்க போகிறார்கள் என்பது மிகப்பெரிய சஸ்பென்ஸாக இருந்தது.

    ஏன் சஸ்பென்ஸ்

    ஏன் சஸ்பென்ஸ்

    ஏனென்றால் திமுக சார்பாக அங்கு பூண்டி கலைவாணன் நிற்கிறார். அதிமுக சார்பாக அங்கு ஆர் ஜீவானந்தம் போட்டியிடுகிறார். இரண்டு வேட்பாளர்களும் திருவாரூரில் மிகவும் வலுவான வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லோர் கவனமும் அமமுக மீதி திரும்பியது.

    [39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

    யார் போட்டி

    யார் போட்டி

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் தொகுதியில் இவர் மிகவும் பிரபலமான நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    போட்டி இருந்தது

    போட்டி இருந்தது

    அமமுகவைப் கட்சிக்குள் இந்த தொகுதியில் போட்டியிட இரண்டு பேர் வேட்பாளர்கள் ரேஸில் இருந்தனர். கடந்த 2011 தேர்தலில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த குடவாசல் ராஜேந்திரன் முக்கியமானவர். அதேபோல் அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.

    தேர்வு செய்யப்பட்டார்

    தேர்வு செய்யப்பட்டார்

    இதில் இருந்துதான் தற்போது அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே எஸ்.காமராஜ்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவரையே டிடிவி தினகரன் தேர்வு செய்துள்ளார்.

    English summary
    AMMK Dept.Gen Sec TTV Dinakaran' announces S.Kamaraj as their candidate for in Thiruvarur by-elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X