திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜில்லுன்னு ஒரு குளியல்..மன்னார்குடி ராஜ கோபால சுவாமி கோவில் பாப் கட் செங்கமலத்திற்கு நீச்சல் குளம்

Google Oneindia Tamil News

திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை பாப்கட் செங்கமலத்திற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. பாப்கட் செங்கமலத்திற்காக ஸ்பெஷலாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தை டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். கோயில் வளாகத்தில் ஈசான்ய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழம், 500 சதுரடி பரப்பளவில் இந்த குளம் கட்டப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் செங்கமலம் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 34 வயதாகும் இந்த யானையின் ஹேர் ஸ்டைல் காரணமாக பாப்கட் செங்கமலம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

இந்த யானையின் ஹேர்ஸ்டைலுடன் இந்திய வனத் துறை அதிகாரி ஒருவர் படம் பிடித்து தனது ட்விட்டரில் போட்டவுடன் இந்த செங்கமலம் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது. இந்த யானை கேரளாவிலிருந்து 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் பாகன் பெயர் ராஜகோபால்.

கை கொடுக்காத ஜோடோ யாத்திரை.. 2 மாநிலங்களிலும் தோற்கிறது காங்கிரஸ்? கார்கேவிற்கும் பின்னடைவு கை கொடுக்காத ஜோடோ யாத்திரை.. 2 மாநிலங்களிலும் தோற்கிறது காங்கிரஸ்? கார்கேவிற்கும் பின்னடைவு

பாப் கட் செங்கமலம்

பாப் கட் செங்கமலம்

செங்கமலத்தின் தனித்துவமான ஹேர்ஸ்டைலை இவர்தான் பராமரித்து வருகிறது. அனைவருடனும் நன்றாக பழகும் என்பதால் கோயில்களில் சில யானைகளை கட்டி வைப்பதில்லை. அதில் ஒரு யானை இந்த செங்கமலம். இதை எப்போதும் கட்டி வைப்பதில்லை.

செல்லமான செங்கமலம்

செல்லமான செங்கமலம்

தினந்தோறும் செங்கமலத்தை குளிக்க வைத்து அதன் தலைமுடியை துவட்டிவிட்டு, பின்னர் சீப்பால் வாரி விடுவார். அத்தனை அழகாக இருக்கும் இந்த செங்கமலம். கோயில் மூடிய பின்னர் கோயிலை சுற்றி வருகிறது செங்கமலம். இவளுக்கு கோடை காலங்களில் தினமும் 3 முறை தலைக்கு குளிக்க வைப்பது வழக்கம்.

செங்கமலத்திற்கு நீச்சல் குளம்

செங்கமலத்திற்கு நீச்சல் குளம்

இந்த யானை குளிப்பதற்காக ஏற்கனவே ரூ.75,000 செலவில் ஷவர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு கோயில் வளாகத்திலேயே நீச்சல் குளம் கட்டித்தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று ரூ.10 லட்சம் மதிப்பில் இந்து அறநிலையத்துறை நீச்சல் குளத்தை கட்டி கொடுத்துள்ளது.

யானைக்கு நீச்சல் குளம்

யானைக்கு நீச்சல் குளம்

பாப்கட் செங்கமலத்திற்காக ஸ்பெஷலாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தை டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். கோயில் வளாகத்தில் ஈசான்ய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழம், 500 சதுரடி பரப்பளவில் இந்த குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் செங்கமலம் யானை குளித்து மகிழ்ந்த காட்சியை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.

English summary
Sengamalam the elephant lives at the Rajagopalaswamy Temple in the town of Mannargudi, but her bob-cut hair has earned her fans across the country. Mannargudi Rajagopala Swamy Temple Elephant Bob cut Sengamalam has been constructed by the HRCE Department at a cost of Rs.10 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X