திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காரை துறந்தார்.. கையில் கயிறு பிடித்தார்.. மாட்டு வண்டி ஓட்டி வந்த எடப்பாடியார்.. வியந்துபோன மக்கள்

Google Oneindia Tamil News

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியாருக்கு திருவாரூரில் இன்று இரவு பாராட்டு விழாவுக்கு, விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன. அதில் காவிரி காப்பாளர் என்ற பட்டப்பெயர் எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, காரில் வராமல் மாட்டு வண்டியை தானே ஓட்டிக் கொண்டு திருவாரூர் விவசாயிகள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். தானும் விவசாயிதான் என அடிக்கடி மேடைகளில் கூறுபவர் எடப்பாடியார். எனவே, மாட்டு வண்டியை ஓட்டி வந்து அதை நிரூபித்துக் காட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

CM Edappadi Palanisamy comes by bullock

முதல்வர் டுவிட்டர் பதிவில், இதுபற்றி கூறுகையில், காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவித்து வரலாற்று சாதனை படைத்தமைக்காக, திருவாரூரில் விவசாய சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாட்டு வண்டியில் வந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, வேட்டியை மடித்துக் கட்டி, நாற்று நட்டும் எடப்பாடியார் அசத்தியிருந்தார்.

காவிரி காப்பாளர்.. விவசாயிகள் கொடுத்த பட்டம்.. நெகிழ்ந்த எடப்பாடியார்.. பல மாஸ் திட்டங்கள் அறிவிப்புகாவிரி காப்பாளர்.. விவசாயிகள் கொடுத்த பட்டம்.. நெகிழ்ந்த எடப்பாடியார்.. பல மாஸ் திட்டங்கள் அறிவிப்பு

திருவாரூர் பாராட்டு விழாவில் பேசிய, எடப்பாடியார், நீண்டகாலமாக விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கைகளை எங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக, அனைத்து விவசாய சங்க அமைப்புகளும் சேர்ந்து காவிரி காப்பாளர் என்ற ஒரு அற்புதமான படத்தை எனக்கு கொடுத்துள்ளார்கள்.

காவிரியை காக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உணருகிறேன். இத்தோடு முடிந்துவிடவில்லை.. இனி எப்போது பிரச்சனை வந்தாலும் காவேரியை நீங்கள்தான் காக்க வேண்டும் என்ற பொறுப்பை என் மீது சுமத்தி விட்டீர்கள். நிச்சயமாக கண்ணை இமை காப்பது போல டெல்டா பாசன விவசாயிகளை, நானும் எங்களுடைய அரசும் நிச்சயமாக காப்போம்.

அச்சப்பட தேவையில்லை. நான் ஒரு விவசாயி என்ற காரணத்தால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். படிப்படியாக விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கு எனது அரசு அனைத்து விதமாகவும், துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும் பல திட்டங்களையும் அறிவித்தார்.

English summary
CM Edappadi Palanisamy comes by bullock cart ti Thiruvarur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X