திடுக்கிட்ட முதல்வர்! ஏன்.. ஏன் என்ன பார்க்க வந்தீங்க? நெகிழ வைத்த "மாமா".. எதிர்பார்க்காத சந்திப்பு
திருவாரூர்: இரண்டு நாட்களுக்கு முன் டெல்டாவிற்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கு நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை பற்றி பகிர்ந்து உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டார். 2 நாள் பயணம் மேற்கொண்டவர்.. டெல்டாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
டெல்டாவில் பல்வேறு மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடக்கின்றன. பல ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறிய கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
99வது பிறந்தநாள்.. கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.. அறிவாலயத்தில் கோலாகலம்

ஆய்வு பணிகள்
இந்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஏரிகள், குளங்களை பார்வையிட்டார். பின்னர் அங்கிருக்கும் விவசாயிகளிடம் நேரடியாக பேசி குறைகளை கேட்டறிந்தார். டெல்டா மாவட்டங்களில் 4418 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பே டெல்டாவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. 681 பணிகள் செய்யப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி கூட்டணி
அதன்பின் வேளாங்கண்ணியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ஓர் இரவு தங்கிய முதல்வர் ஸ்டாலின், அங்கு திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். டெல்டா மாவட்ட அரசியல் நிலவரங்கள், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறைத்து முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். உட்கட்சி தேர்தல் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தார்.

திருவாரூர் சென்றார்
இந்த நிலையில் மறுநாள் திருவாரூர் சென்றவர்.. அங்கு பேரளத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பேரளம் முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாவின் சொந்த ஊர் ஆகும். இங்குதான் முதல்வரின் தாய் மாமன் இருக்கிறார். இந்த நிலையில் முதல்வரின் வருகையை தெரிந்து கொண்டு, அவரின் மாமன் நேரில் சென்று அவரை பார்த்து இருக்கிறார். அவருக்கு தற்போது 99 வயது ஆகிறது. இருப்பினும் முதல்வரை நேரில் சென்று பார்த்து இருக்கிறார்.

நேரில் பார்த்த மாமா
முதல்வரை சந்தித்த அவரின் மாமா.. ரொம்ப நல்லா ஆட்சி பண்ணுற. நல்ல நிர்வாகம் பண்ணுற என்று பாராட்டி இருக்கிறார். 99 வயதில் இப்படி மாமா தன்னை பார்க்க வந்ததை எதிர்பார்க்காத முதல்வர் ஸ்டாலின் சட்டென திடுக்கிட்டு.. ஏன் இந்த வயதில் என்னை பார்க்க வந்தீங்க. நானே வரலாம்னு இருந்தேன். ஏன் இப்படி கஷ்டப்படுறீங்க என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அவரின் மாமா.. இருக்கட்டும்பா.. உன்னை நேரில் பார்த்து வாழ்த்து சொல்லலாம்னுதான் வந்தேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நினைவுகளை பகிர்ந்தார்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு.. சிறு வயதில் பேரளம் வந்தது குறித்த நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் சென்னை வருவதற்கு முன் சில நாட்கள் பேரளத்தில் தனது தாயாரின் வீட்டில் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது இங்கே அவர் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் முதல்வரின் டெல்டா பயணத்தின் போது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.