திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய வரமறுத்த விஏஓ.. தாம்பூலம் வைத்து அழைத்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா

Google Oneindia Tamil News

திருவாரூர்: மன்னார்குடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலைகளை ஆய்வு செய்ய வரமறுத்த கிராம நிர்வாக அலுவலரை அந்த தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா தாம்பூலம் வைத்து அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவின் டிஆர்பி ராஜா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் மகன்.

இவரது பேச்சு திறமையை கண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து கூறினார். இந்நிலையில் மன்னார்குடியில் அவர் செய்த ஒரு வேலை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

கோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ கோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ

விவசாயிகள் புகார்

விவசாயிகள் புகார்

அதாவது மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட பேரையூர் கிராமத்தில் மீத்தேன் கொண்டு செல்வதற்காக அங்குள்ள ஆற்றை ஆக்கிரமித்து சாலை போடப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விஏஓவுக்கு கோரிக்கை

விஏஓவுக்கு கோரிக்கை

இதனால் விஷயத்தை எம்எல்ஏவிடம் கொண்டு சென்றனர் விவசாயிகள். இதையடுத்து ஆற்றை அளந்து பார்க்கவேண்டும் என்றும் அதற்கான ஆவணங்களை கொண்டுவருமாறும் கோரிக்கை விடுத்தார் எம்எல்ஏ டிஆர்பி ராஜா.

தாம்பூலத் தட்டுடன் சென்ற எம்எல்ஏ

ஆனால் பல முறை அழைத்தும் கிராம நிர்வாக அதிகாரி வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பழம், பூ, வெற்றிலை பாக்கு என தாம்பூலத் தட்டுடன் சென்றார் எம்எல்ஏ ராஜா.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

பின்னர் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்த அவர் தாம்பூலத்தை அவரது கையில் கொடுத்து ஆய்வு செய்ய வருமாறு அழைத்தார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
DMK MLA TRB Rajaa calls VAO with thampoolam to inquire the river area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X