• search
திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரெட் கலர் சுடிதாரில் வந்த.. வெள்ளைக்கார வேலாயி.. 30,000 பணத்தை பறி கொடுத்து பதறிய சபியுல்லா!

|
  மோசடி செய்து பணம் பறிக்கும் வெளிநாட்டு தம்பதி-வீடியோ

  திருவாரூர்: அட வெள்ளைக்கார வேலாயி... இப்படி பண்ணிட்டியே.. என்று பணத்தை பறிகொடுத்தவர்கள் தலையில் துண்டு போட்டு உட்கார்ந்து உள்ளனர்.

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகரில் ஹலால் என்ற ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. இந்த கடையின் ஓனர் சபியுல்லா. 32 வயதாகிறது.

  இவரது கடைக்கு புளு கலர் கோட்சூட் போட்ட ஒரு நபரும், ரெட் கலர் சுடிதார் அணிந்த ஒரு பெண்ணும் வந்துள்ளனர். 2 பேரும் ஃபாரீனர்ஸ்!

  சிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்!

  மனி எக்ஸ்சேஞ்ச்

  மனி எக்ஸ்சேஞ்ச்

  கோட் சூட் போட்டநபர், கடைக்காரரிடம் பிளேடு வாங்கியுள்ளார். பிறகு "நாங்க வெளிநாட்டுல இருந்து சுத்தி பார்க்க வந்திருக்கோம். என் அப்பா மனிஎக்ஸ்சேஞ்ச் அனுப்பி வைத்திருக்கிறார், ஆனால் எதை எங்க மாத்தணும்" என்று கேட்டு, தனது பர்ஸில் உள்ள வெளிநாட்டு பணத்தை காட்டினார்.

  ரூபாய் நோட்டு கட்டு

  ரூபாய் நோட்டு கட்டு

  பின்னர் இந்தியா பணத்தில் சிஎல் என்று போட்ட சீரியல் நம்பர் உள்ள பணம் உங்க கிட்ட இருந்தா, எனக்கு தாங்களேன் என்று கேட்டுள்ளார். அதற்கு சபியுல்லா இல்லை என்று முதலில் மறுக்கவும், அந்த கோட்-சூட் ஆசாமி விடுவதாக இல்லை. "நானே பார்த்துக்கறேன்.. பரவாயில்லை.. காட்டுங்க.." என்று சொல்லி, முதலில் 500 ரூபாய் கட்டை பார்த்துவிட்டு தந்தார், பிறகு, 2ஆயிரம் ரூபாய் கட்டை வாங்கி பார்த்துவிட்டு அதையும் தந்தார்.

  செல்பி

  செல்பி

  இந்த சமயத்தில் அந்த ரெட் கலர் சுடிதார் போட்டு வந்த பெண், கடையில் நின்றிருந்தவர்களிடம் பேச்சு கொடுத்து கொண்டு, செல்போனில் செல்பி எடுத்து அவர்களை திசை திருப்பி கொண்டிருந்தார். கடைக்கு வந்தவர்களும் வெளிநாட்டு பெண்.. கலர்ரா இருக்காங்களே என்று வாயை பிளந்து கொண்டு போய் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.

  கோட்சூட் ஆசாமி

  கோட்சூட் ஆசாமி

  சிறிது நேரம் கழித்து, சற்று தூரமாக நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி இந்த வெள்ளைக்கார ஜோடியும் தப்பிவிட்டது. அந்த ஜோடி காரில் ஏறி போனபிறகுதான், பணக்கட்டுகளிலிருந்து சுமார் 30ஆயிரம் வரை சுட்டுவிட்டார் கோட்சூட் ஆசாமி என்பது கடைக்காரருக்கு தெரியவந்தது. உடனடியாக, சபியுல்லா அந்த ஜோடியை ஓடி ஓடி தேடி அலைந்துள்ளார். பிறகு முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யவும்தான், கடையில் இருந்த சிசிடிவி காமிராவில் இது அனைத்துமே பதிவாகி இருந்தது தெரியவந்தது.

  நூதன கொள்ளை

  நூதன கொள்ளை

  யார் இந்த மோசடி தம்பதி என்று தெரியவில்லை. இந்த ஜோடி ஒரு வாரமாகவே தமிழ்நாட்டில் முகாமிட்டு, இப்படியே நூதனமாக கொள்ளையிட்டு வருகிறதாம். ஒரே நாளில் விழுப்புரத்தில் 3 இடங்களில் கைவரிசை காட்டியுள்ள அளவுக்கு கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழக காவல்துறைக்கு இந்த வெள்ளைக்கார ஜோடியை பிடிப்பது ஒரு சவாலாக எழுந்துள்ளது என்றாலும், நம்ம போலீசார் வெகுசீக்கிரத்தில் இவர்களை கைது செய்து விடுவார்கள் என்றே நம்பப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Foreign couple are cheating in Tamil Nadu and robbing money. The police are taking action seriously
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more