• search
திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வழக்கை சந்திக்க நான் ரெடி... வழக்கு போட நீங்க ரெடியா - முதல்வருக்கு சவால் விட்ட மு.க ஸ்டாலின்

Google Oneindia Tamil News

திருவாரூர்: முதல்வராகவே இருக்கும் பழனிசாமி அவர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் சொல்லும் அத்தனையும் பொய்யாகவே, உள்ளது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார்... நீங்கள் தயாரா? நான் ரெடி... பழனிசாமி நீங்க ரெடியா? என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே சூட்டோடு சூட்டாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.

திருவாரூரில் பிரச்சாரத்தை ஆரம்பித்த மு.க. ஸ்டாலின், இன்று நான் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறேன். எங்கே என்றால், நம் திருவாரூரில்! கலைஞர் வளர்ந்த - கலைஞரை உருவாக்கிய இந்த திருவாரூர் மண்ணில் என்று சொன்னார்.

"அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான், கன்பார்ம்".. எடப்பாடியாரை ஓவர்டேக் செய்து.. அதிர வைத்த நக்கீரன் சர்வே

மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

கலைஞருடைய மகனாக வந்திருக்கிறேன். நான் மட்டுமா, நீங்களும் கலைஞருடைய பிள்ளைகள்தான். நான் இதே திருவாரூருக்குக் குழந்தையாக - பள்ளிக்கூட மாணவனாக - கல்லூரியில் படிக்கும் மாணவனாக -இளைஞரணிச் செயலாளராக - சட்டமன்ற உறுப்பினராக - கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக - சென்னை மாநகரத்தின் மேயராக - கழகத்தின் பொருளாளராக - உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக - செயல் தலைவராக - தலைவராக வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன்.

வாக்கு சேகரித்த ஸ்டாலின்

வாக்கு சேகரித்த ஸ்டாலின்

என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போதும், இந்த திருவாரூரில் இருந்து என்னுடைய பரப்புரையைத் தொடங்கினேன். இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கும், முதன் முதலாக இந்த திருவாரூரிலிருந்து தான் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறேன்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

எவ்வாறு, இந்தியாவின் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இன்றைக்கு 3வது இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரமாக இருக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்களோ, அதேபோல இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

வாஷ் அவுட் அதிமுக

வாஷ் அவுட் அதிமுக

200 என்று ஒரு மாதத்திற்கு முன்னர் சொன்னேன். அது இப்போது அல்ல! இப்போது நான் சுற்றி வரும் பயணத்தில் உணரக்கூடிய உணர்வு என்ன என்று கேட்டால், இந்த நாடே எண்ணிக் கொண்டிருப்பது என்ன என்று கேட்டால் - இந்து ராம் அவர்களே தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். தி.மு.க. 234-க்கு 234 இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணி ‘வாஷ் அவுட்' அதுதான் தமிழக மக்களின் நிலையாக இன்று இருக்கிறது. எனவே அப்படிப்பட்ட வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வதற்காகத்தான், உங்களை தேடி - நாடி நான் இன்றைக்கு திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.

ஜெயலலிதா ஆட்சி

ஜெயலலிதா ஆட்சி

10 ஆண்டுகாலமாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் பழனிசாமி அவர்களின் தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன். 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டைப் பாழடித்து விட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார். ஊழல் வழக்கின் காரணமாக அவர் தண்டிக்கப்பட்டு, அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

ஓபிஎஸ், பழனிச்சாமி

ஓபிஎஸ், பழனிச்சாமி

இடையில் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். எனவே வழக்குப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த காரணத்தால் ஆட்சியை ஒழுங்காக நடத்தவில்லை. அதற்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்று 1 ஆண்டு காலத்திற்குள் அவர் உடல் நலிவுற்று அவர் மறைந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மறைந்த பிறகு 4 ஆண்டு காலமாக - இடையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இருந்தார் - அதனைத் தொடர்ந்து பழனிசாமி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று எந்த அளவிற்கு சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடு நன்றாக அறியும்.

பொய் சொல்லும் பழனிச்சாமி

பொய் சொல்லும் பழனிச்சாமி

இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் அவரும் ஈடுபட்டிருக்கிறார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் அதில் தவறில்லை. அதை விமர்சிக்க நான் விரும்பவில்லை. ஆனால் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் - சொல்லும் அத்தனையும் பொய்யாகவே, ‘பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா' என்று கிராமங்களில் சொல்வார்கள் - அதுபோல பொய்களையே செய்திகளாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஜெ. மரணம் எப்படி

ஜெ. மரணம் எப்படி

ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞரும், மு.க.ஸ்டாலினும் தான் என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டுகாலத்தில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல்நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட துப்பற்ற ஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

வழக்கு போட ரெடியா?

வழக்கு போட ரெடியா?

தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார்... நீங்கள் தயாரா? நான் ரெடி... பழனிசாமி நீங்க ரெடியா? எதை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகலாமா? நாக்கில் உங்களுக்கு நரம்பு இல்லையா? கலைஞர்தான் காரணம் என்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே எப்படி? அதுதான் எனக்கும் புரியவில்லை என்று கூறியுள்ளார் மு.க ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் முதல் வேலை

திமுக ஆட்சியில் முதல் வேலை

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவது தான் எங்களுடைய கடமை. நிச்சயமாக சொல்கிறேன் - உறுதியாக சொல்கிறேன் - சத்தியமாக சொல்கிறேன் ஸ்டாலின் விடவே மாட்டான் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

திசை திருப்ப முயற்சி

திசை திருப்ப முயற்சி

அதைத்தான் இப்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறோம். எனவே இதை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு ஆத்திரத்தின் காரணமாக கலைஞர் தான் காரணம் - ஸ்டாலின் தான் காரணம் என்று திசைதிருப்புவதற்கு முயற்சிக்கிறார். அதை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
Palanisamy, who is the chief minister, says everything they say is a lie. DMK leader MK Stalin has said that there is. If Stalin is responsible for Jayalalithaa's death, sue. I'm ready to meet Are you ready? I am ready… Palanisamy Are you ready? Stalin said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X