திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    2-ஆம் ஆண்டு விழாவை திருவாரூரில் கொண்டாட காரணம் என்ன?.. கமல் விளக்கம்- வீடியோ

    திருவாரூர்: மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவை திருவாரூரில் கமல் கொண்டாட காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

    கமல்ஹாசன் சமீபகாலமாக திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் திமுக ஒரு ஊழல் பொதி. அதை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என்று கமல் கூறியிருந்தார்.

    தமிழர்களே.. நாட்டின் பிரதமரை நீங்கள்தான் தேர்வு செய்ய போகிறீர்கள்.. கமல் பரபரப்பு பேச்சு தமிழர்களே.. நாட்டின் பிரதமரை நீங்கள்தான் தேர்வு செய்ய போகிறீர்கள்.. கமல் பரபரப்பு பேச்சு

    விழாவில்

    விழாவில்

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முரசொலியில் தலையங்கத்தில் கமலை வறுத்தெடுத்தனர். பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு விழாவில் கமல் பேசினார்.

    புதிய சட்டை

    புதிய சட்டை

    அப்போது அவர் கூறுகையில் நேற்று வந்த ஒரு சின்ன பையனை பார்த்து கிராம சபை நடத்த காப்பியடிக்கிறீர்களே. வெட்கமாக இல்லையா என கேள்வி எழுப்பினார். மேலும் சட்டசபையில் நான் சட்டையை கிழித்து கொள்ளமாட்டேன். அப்படியே கிழிந்தாலும் புதிய சட்டை மாற்றிக் கொள்வேன் என தெரிவித்தார்.

    தொடக்க விழா

    தொடக்க விழா

    இதற்கும் முரசொலி தலையங்கத்தில் பதிலடி கிடைத்தது. இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 2-ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    திருவாரூர்

    திருவாரூர்

    2-ஆம் ஆண்டு தொடக்க விழாவை திருவாரூரில் கமல்ஹாசன் நடத்தினார். தொடக்க விழாவை நடத்த திருவாரூரை தேர்வு செய்தது ஏன் என கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    விமர்சனம்

    விமர்சனம்

    அதற்கு அவர் பதிலளிக்கையில் திருவாரூரை தேர்வு செய்ய காரணம் தமிழகத்துக்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர். குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றார் கமல்ஹாசன். இது போல் திமுகவை தொடர்ந்து வம்பிழுத்து வந்த கமல்ஹாசன், இறுதியில் கருணாநிதியின் சொந்த ஊரையும் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Haasan criticises Karunanidhi's home district Thiruvarur. Heir of Politics starts from there, he says.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X