திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லலிதா ஜுவல்லரி கொள்ளை.. உச்சக்கட்ட பரபரப்பு... மணிகண்டனை தொடர்ந்து.. சுரேஷும் சிக்கினான்

லலிதா ஜுவல்லரி கடையில் திருடிய இருவரில் ஒருவன் திருவாரூரில் சிக்கினான்.

Google Oneindia Tamil News

Recommended Video

    lalitha jewellery theft issue| நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் பிடிபட்டான்

    திருவாரூர்: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் போலீசாரின் விசாரணை உச்சக்கட்ட சூட்டில் உள்ளது. திருச்சி போலீஸாரின் அதிரடி விசாரணை மேற்றும் தேடுதல் வேட்டையில் ஏற்கனவே ஒரு மணிகண்டன் என்ற கொள்ளையன் சிக்கிய நிலையில், இப்போது சுரேஷ் என்பவனும் வசமாக சிக்கி கொண்டுள்ளான்.

    பிடிபட்ட நபரிடமிருந்து 2 மூட்டைகளில் நகைகள் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையிலிருந்து திருடப்பட்டவை என்பது பார் கோடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    கடையில் துளையிட்டு

    கடையில் துளையிட்டு

    இரவு நேரத்தில், நகைக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

    சிசிடிவி பதிவுகள்

    சிசிடிவி பதிவுகள்

    கொள்ளையர்கள் வட மாநிலத்தவரா, கடை ஊழியர்களுக்குத் தொடர்பு உண்டா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. நேற்றுதான் கடையின் சிசிடிவி பதிவுகளும் கூட வெளியாகியிருந்தன. இந்த நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின் போது பைக்கில் வந்த கொள்ளையன் பிடிபட்டார்.

    ஒருவன் சிக்கினான் இன்னொருவன் ஓட்டம்

    ஒருவன் சிக்கினான் இன்னொருவன் ஓட்டம்

    2 மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, 'பார் கோடு' மூலம் தெரியவந்துள்ளது. பிடிபட்டவனிடம் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்டது என்பது உறுதியானதாக தகவல் தெரியவந்ததுள்ளது.

    சுரேஷ் தப்பி ஓட்டம்

    சுரேஷ் தப்பி ஓட்டம்

    முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்தது. தப்பியோடியவர் சீராதோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருவர் தானா, அல்லது வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது. பிடிபட்ட கொள்ளையன் மணிகண்டன் திருச்சியை சேர்ந்தவர்.

    சிக்குவாரா சுரேஷ்

    சிக்குவாரா சுரேஷ்

    தப்பி ஓடி விட்ட சுரேஷை என்பவரை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். சுரேஷின் தாயார் கனகவல்லி, மாரியப்பன், ரவி குணா உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து தங்கள் வசம் வைத்து போலீஸார் விசாரிக்கவும் செய்தனர். இன்றைக்குள் சுரேஷும் பிடிபடுவார் என போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

     சுரேஷ் கைது

    சுரேஷ் கைது

    அதன்படியே, இப்போது சுரேஷ் பிடிபட்டுள்ளார். இந்த சுரேஷ்தான் லலிதா ஜுவல்லரி உட்பட பல கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக இருந்த முருகனின் தம்பி என்பது தெரியவந்துள்ளது. முருகன் தயாரித்த ஒரு தெலுங்கு படத்திலும் சுரேஷ் நடித்துள்ளான். நாடு தழுவிய வங்கி ஏடிஎம் கொள்ளை முதல் லலிதா ஜுவல்லரி திருட்டு வரை முருகனுடன் சுரேஷூம் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

     முருகன்

    முருகன்

    இப்போது போலீஸ் பிடியில் மணிகண்டன், சுரேஷ் இருவருமே சிக்கி உள்ளதால், விசாரணை படு வேகமாகசூடு பிடித்துள்ளது. இதனால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இவர்கள் இருவரிடம் இருந்தும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கேங் லீடர் முருகனையும் இன்று இரவுக்குள் போலீசார் கைது செய்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    English summary
    Thiruvarur police has arrested a thief named Manikandan in the Lalitha Jwewllery theft case. Suresh has escaped.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X