திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு ரைஸ் மில்லாவது கட்டுனீங்களா.. அதிமுக முன்னாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய அமைச்சர் சக்கரபாணி

Google Oneindia Tamil News

திருவாரூர் : கடந்த 10 ஆண்டுகளாக நன்னிலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும், உணவுத்துறை அமைச்சராகவும் இருந்த காமராஜ் நன்னிலத்தில் ஒரு நவின அரிசி ஆலையை அமைத்திருக்கலாம் ஆனால் அமைக்கவில்லையே ஏன் என மன்னார்குடியில் அமைச்சர் சக்கரபாணி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    ஒரு ரைஸ் மில்லாவது கட்டுனீங்களா.. அதிமுக முன்னாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய அமைச்சர் சக்கரபாணி

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துரையாடினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி, கடந்தாண்டு சம்பா பருவத்தில் நான்கு மாவட்டங்களிலும் சுமார் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு அதைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என கூறினார்.

    திமுகவுக்கு எதிராக ஒன்றாக வாருங்கள்.. அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கைதிமுகவுக்கு எதிராக ஒன்றாக வாருங்கள்.. அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கை

    அமைச்சர் சக்கரபாணி

    அமைச்சர் சக்கரபாணி

    டெல்டா மாவட்டங்களில் சுமார் 1400 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும், தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற எட்டு மாத காலத்திற்க்குள் விவசாயிகள் நலன் காக்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் எனவும், விளைச்சலை கண்டது. தமிழக முதல்வர் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைதந்த பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேரடியாக ஆய்வு செய்து அங்குள்ள பணியாளர்கள், பட்டியல் எழுத்தர், எழுத்தர்கள், காவலர்கள், விவசாயிகள் என அனைவரிடம் குறை, நிறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார்கள் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

    நெல் கொள்முதல் நிலையங்கள்

    நெல் கொள்முதல் நிலையங்கள்

    அதனடிப்படையில், விவசாயிகள் எந்தவித பாதிப்பும் அடைய கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் அரசுக்கு நிதி நெருக்கடி நிலையிலும் பணியாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ 10 என பழைய விலையினை விட மும்மடங்கு உயர்த்தி வழங்கியுள்ளார்கள் எனவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), வேளாண்மை இணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் 2 விவசாய சங்க பிரதிநிதிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைவர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விவசாய சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் இந்தாண்டு திருவாரூர் மாவட்டத்தில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது எனக் கூறினார்.

    கண்காணிப்பு குழு

    கண்காணிப்பு குழு

    தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லினை கொள்முதல் செய்வதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் தங்கள் நெல்லினை பதிவு செய்து கொள்ள கூடிய வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது எனவும், இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரியபயிற்சியும் வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும், டெல்டா மாவட்டங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் நெல் மூட்டைகளை கண்காணிப்பதற்கு மாவட்ட எல்லையோரங்களில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நாள் ஓன்றுக்கு ஆயிரம் நெல் முட்டைகள் கொள்முதல் செய்யபடும் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக நன்னிலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் ஒரு நவின அரிசி ஆலையை அமைத்திருக்கலாம் ஆனால் அமைக்கவில்லை, மன்னார்குடி அருகில் சுந்தரக்கோட்டையில் உள்ள நவீன அரசி ஆலையை ஒரு நாளாவது முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டாரா என ஆவேசமாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

    English summary
    Kamaraj, who has been a legislator and food minister in Nannilam constituency for the last 10 years, may have set up a modern rice mill in Nannilam but why not? In Mannargudi Minister Chakrabarty spoke angrily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X