• search
திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ம்.. அப்பறம்".. ஊசி போட்டபடியே பகீரை கிளப்பிய நர்ஸ்.. வைரலாகும் வீடியோ.. கதிகலங்கும் மன்னார்குடி

Google Oneindia Tamil News

திருவாரூர்: செல்போனில் பேசிக் கொண்டே, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நர்ஸ் ஒருவரின் செயலால் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டுள்ளது.
உலகை நடுநடுங்க வைத்து கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. லட்சக்கணக்கான டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் இதற்கான பணியில் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம், தொற்றில் இருந்து தடுக்க இப்போதைக்கு தடுப்பூசிகள் மட்டுமே ஓரளவு பலன் தந்து வருகிறது.. அதனால், உலகம் முழுவதும் தடுப்பூசிகளை செலுத்துவதில் அந்தந்த நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

போலீசுக்கு வாரம் ஒரு நாள் லீவு... காவல்துறையினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!போலீசுக்கு வாரம் ஒரு நாள் லீவு... காவல்துறையினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!

 தடுப்பூசி

தடுப்பூசி

முதன்முதலில், இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தபோது, நேரடியாக பொதுமக்களுக்கு செலுத்தாமல், களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.. அதன்படி, நியூயார்க் நகரில் சான்ட்ராலின்ஸ்சே என்ற நர்சுக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் நர்ஸ்களுக்கான முக்கியத்துவங்கள் தரப்பட்டு வருகின்றன..

 பொறுப்புணர்ச்சி

பொறுப்புணர்ச்சி

அதற்கேற்றபடி எத்தனையோ நர்ஸ்கள், தொற்றை ஒழிப்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்கள்.. குடும்பத்தை மறந்து, சொந்தங்களை மறந்து, மருத்துவ பணியில் தங்களை இழைத்து கொண்டும் வருகின்றனர்.. ஆனாலும், ஒருசில நர்ஸ்கள் தங்கள் பொறுப்புணர்ச்சியையும், கடமையையும் மறந்து அத்துமீறல்களிலும் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்.. இதற்கு நம் நாடும் விலக்கல்ல..!

பணம்

பணம்

சில தினங்களுக்கு முன்பு, பெங்களூருவில் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ரேகா என்ற நர்ஸ், ஆஸ்பத்திரிக்கு வரும் தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தாமல், அவற்றை திருடி சென்றுள்ளார்.. அந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி, பணம் வசூலித்தும் வந்துள்ளார்.. நர்ஸ் ரேகா தன்னுடைய வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் சில வீடியோ காட்சிகளும் வெளியானதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

  Tamilnadu vaccinated 21 lakhs people! Milestone in Mega Drive | OneIndia Tamil
   தடுப்பூசிகள்

  தடுப்பூசிகள்

  அதுபோலவே, கரூரிலும் ஒரு சம்பவம் நடந்தது.. கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி நர்ஸ் தனலட்சுமி என்பவர் அவரது பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு தடுப்பு ஊசி போட்டுள்ளார்... அவர் வீட்டில் சோதனையிட்டபோது 100 நபர்களுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தனலட்சுமியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

  திருவாரூர்

  திருவாரூர்

  இப்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பெறுகவாழ்ந்தான் அருகே காந்தாரி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.. மாவட்டம் முழுவதும் ஒரே சமயத்தில் 20 ஆயிரம் நபர்களுக்கு கடைசி சிறப்பு முகாம் அது.. எனவே, பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்திருந்தனர்.

   செல்போன்

  செல்போன்

  அப்போது, நர்ஸ் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டே, ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்... அது டியூட்டி என்பதையும் மறந்து, கவனக்குறைவாக தடுப்பூசி செலுத்தும் இந்த போட்டோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது... இந்த கவனக்குறைவால் ஏதேனும் குழப்பம் ஏற்படுமோ என்ற அச்சமும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

   கோவிட் ஷீல்டு

  கோவிட் ஷீல்டு

  பொதுவாக, தடுப்பூசி என்றாலே லேசான கலக்கத்துடன்தான் பொதுமக்கள் முகாம்களுக்கு வந்து செலுத்தி கொண்டு போகிறார்கள்.. அந்த மாதிரி நேரங்களில், என்ன விதமான தடுப்பூசி தங்களுக்கு போடப்பட்டுள்ளது என்ற குழப்பத்திலும் அவர்கள் இருப்பது இயல்பான விஷயமே.. அப்படி ஒரு குழப்பமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மன்னார்குடி அருகே நடந்தது.. தடுப்பூசி முகாமில் கோவிட் ஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு கோவாக்சின் குழப்பமான சூழல் ஏற்பட்டு பிறகு அது சரி செய்யப்பட்டதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

  அஜாக்கிரதை

  அஜாக்கிரதை

  எனவே, பொதுமக்களுக்கு கொஞ்சம்கூட குழப்பம் ஏற்படாத வகையில் சுகாதாரத்துறையினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.. ஆனால், இந்த நர்ஸ் அதையெல்லாம் மறந்து, செல்போன் பேசிக் கொண்டே வேலை பார்த்தால், தடுப்பூசியை மாற்றி செலுத்தும் ஆபத்தும் ஏற்படும் என்பதையும் மறந்து அஜாக்கிரதையாக ஊசி செலுத்தியதுதான் அதிருப்தியை தந்து வருகிறது.

  English summary
  Nurse who was vaccinated while talking Mobile phone near Thiruvarur
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X