திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"2 புள்ளிகள்".. தோள் மீது கை போட்டு.. ஒரே சிரிப்பு.. திடீர் சந்திப்புக்கு காரணம்?.. வியக்கும் அதிமுக

திவாகரனும் மாஜி அமைச்சர் காமராஜும் சந்தித்து பேசியுள்ளனர்

Google Oneindia Tamil News

திருவாரூர்: திவாகரனும், மாஜி அமைச்சர் காமராஜும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டதுடன், ஒருவர் தோள் மீது ஒருவர் கைகளை போட்டு சகஜமாக பேசியுள்ளனர்.. இது அதிமுகவில் சலசலப்பை கிளப்பி விட்டு வருகிறது.

சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர் திவாகரன்... சசிகலா ஜெயிலுக்கு சென்ற பிறகு திவாகரனும், தினகரனும் அதிமுகவில் நீடித்து வந்தனர்...

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்

ஆனால், இவர்களுக்கு அதிமுகவின் மேல்மட்ட தலைவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கவும், அதிமுகவில் இருந்து விலகினர்.

 தினகரன்

தினகரன்

அமமுகவை தினகரன் தொடங்கினார்... ஆனால், இந்த கட்சி தொடங்கப்பட்டதில் தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது... இதையடுத்து திவாகரன் தனியாக பிரிந்து சென்று "அண்ணா திராவிடர் கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்தார்.

 திவாகரன்

திவாகரன்

ஆளுக்கொரு பக்கம் கட்சி நடத்தி வந்தாலும், அதிமுகவுடன் இணைவதற்கான பேச்சை எடுக்கவே இல்லை.. அதேசமயம் தினகரன் - திவாகரன் இடையே இணக்கமும் நடக்கவில்லை.. சசிகலா ஜெயிலில் இருந்ததால் அதற்கான பேச்சும் எழவில்லை.. இதற்கு பிறகுதான் சசிகலா ரிலீஸ் ஆகி வெளியே வந்தார்... அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. எனவே, அதிமுக மீது உரிமை கோர அனைத்து விதமான வேலைகளிலும் இறங்கி வருகிறார்..

 சந்திப்பு

சந்திப்பு

இதனிடையே, திவாகரனுக்கு கொரோனா தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை சசிகலா சென்று சந்தித்திருந்தார். எனினும், திவாகரன், தினகரன் இருவரும் இப்படி பிரிந்தே உள்ளதால், அவர்களை இணைக்கும் முயற்சியையும் இனிமேல் மேற்கொள்வார் என்றும், அதற்கான ஒரு முத்தாய்ப்பாக நடந்து முடிந்த தினகரன் மகள் திருமணம் அமையக்கூடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

திவாகரன்

திவாகரன்

இதனிடையே, மாஜி அமைச்சர் காமராஜூம், திவாரனும் நேரில் சந்தித்துள்ள நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் கிராமத்தில் ஆள்காட்டி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடந்தது.. இந்த விழாவில் திவாகரனும் காமராஜும் கலந்து கொண்டனர்... இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்... இதை பார்த்ததும் அங்கிருந்த அதிமுகவினர் வாயடைத்து போய்விட்டனர்.

சலசலப்பு

சலசலப்பு

இந்த போட்டோ இணையத்திலும் வெளியாகி அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக, சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்களை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்க தொடங்கியது.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் மனைவி இறந்த நிலையில் சசிகலாவும் டிடிவி தினகரனும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்திருந்தனர்..

 அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்

அது ஒரு சம்பிரதாயமாகவும், அரசியல் நாகரீகமாகவும் கருதப்பட்டாலும், அதிமுகவுடன் இணக்கமாகி விடுவாரோ என்ற சந்தேகத்தையும் அந்த சந்திப்பு கிளப்பியிருந்தது... இப்போது திவாகரனும், காமராஜும் சந்தித்ததும்கூட, ஒரு அரசியல் நாகரீகமா? அல்லது யதேச்சையான சந்திப்பா? அல்லது இரு கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளதா? என்பன போன்ற வலுவான சந்தேகங்களை கிளப்பிவிட்டுள்ளன.

English summary
Sasikala Politics: Divakaran and Ex Minister Kamaraj meets Thiruvarur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X