திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதுமையை காரணம் காட்டி சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அனாதையாக்கிய மகன்கள்.. ஆட்சியரிடம் தந்தை புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அனாதையாக்கிய மகன்கள்.. ஆட்சியரிடம் தந்தை புகார்

    திருவாரூர்: முதுமையை காரணம் காட்டி பெற்ற மகன்களால் அனாதையாக்கப்பட்ட தந்தை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 60 வயதான இவருக்கு மேனகா என்ற மனைவி உள்ளார்.

    இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், தன்னிடம் இருந்த சொத்துக்களை மூன்று மகன்களுக்கும் கோவிந்தராஜ் பிரித்துக் கொடுத்து விட்டார்.

    எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலையாளி அல்ல.. அவர் நிரபராதி.. விடுவித்தது போலீஸ்! எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலையாளி அல்ல.. அவர் நிரபராதி.. விடுவித்தது போலீஸ்!

    தாயை மட்டும்..

    தாயை மட்டும்..

    அதன் பின்னர் இவரது மகன்கள் மூன்று பேரும் கோவிந்தராஜை கைவிட்டதாக தெரிகிறது. இவரது மனைவி மேனகாவை மட்டும் இரண்டாவது மகன் ரமேஷ் என்பவர் தனது பராமரிப்பில் வைத்துள்ளார்.

    பார்ப்பவர்களிடம் உணவு

    பார்ப்பவர்களிடம் உணவு

    தந்தை கோவிந்தராஜை வைத்துப் பராமரிக்க மூன்று மகன்களும் போட்டி போட்டு வருகின்றனர். மகன்கள் யாரும் தந்தையை கவனித்துக்கொள்ள முன்வராத நிலையில், விரக்தியடைந்த கோவிந்தராஜ் திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறார். பார்ப்பவர்களிடம் உணவு கேட்டு, தனது வயிற்றுப் பசியைப் போக்கி, கிடைத்த இடங்களில் படுத்துறங்கி வருகிறார்.

    ஆறுதல் கூறிய ஆட்சியர்

    ஆறுதல் கூறிய ஆட்சியர்

    இந்நிலையில் கோவிந்தராஜ் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் தனது நிலையை விளக்கி புகார் மனு அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதியவர் கோவிந்தராஜுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

    அவலத்தின் உச்சம்

    அவலத்தின் உச்சம்

    பெற்றப்பிள்ளைகளை ஆளாக்க அல்லும் பகலும் உழைத்தவர்கள் தந்தைமார்கள். தான் பார்க்காத உயரத்தையும் தனது பிள்ளைகள் பார்க்க வேண்டும் என அயராது உழைத்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் பிள்ளைகள் அவர்களால் எந்த பலனும் இல்லை என அனாதையாக விடுவது அவலத்தின் உச்சம் என்பதை மறுக்க முடியாது.

    English summary
    A father complaints to Thiruvarur district collector that sons not taking care of him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X