திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவாரூர் தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

Supreme Court closes the cases against Thiruvarur by-election after ECI halted it

வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. இந்த தேர்தல்தான் தற்போது மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி மொத்தம் 3 வழக்குகள் ஏற்கனவே போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது, அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

கடந்த 4ம் தேதி இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போவதாக உச்ச நீதிமன்றம் கூறியது. தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க போவதாக கூறியது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று தேர்தல் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகள் தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ரத்து ஆனதன் காரணமாக மொத்தமாக வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

English summary
Supreme Court closes the cases against Thiruvarur by-election after Election Commission of India halted it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X