திருவாரூரில் டெல்டாவை கூட்டி மாஸ் காட்டிய பாஜக அண்ணாமலை- இலங்கை போல தமிழகம்...திமுக அரசுக்கு சாபம்!
திருவாரூர்: திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பெயரை வைக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
மொத்தம் 5 பேர் இருக்கோம்.. போனை போட்டாலும் எடுக்கலயே ஏன்.. திராவிடமாடல்? ஸ்டாலினுக்கு செல்லூர் நறுக்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதி திருவாரூர். பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை, நாத்திகராக இருந்தாலும் முதல்வர் என்ற பொறுப்பில் இருந்து ஓடவைத்தவர் கருணாநிதி என்பது நீண்டகால புகழாரம். இதனால் திருவாரூ தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்ட வேண்டும் என திருவாரூர் நகர மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்துத்துவா இயக்கங்கள் எதிர்ப்பு
இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நாத்திகராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை தேரோடும் வீதிக்கு வைக்கக் கூடாது; திருவாரூரின் பிற தெருக்களுக்கு அவர் பெயரை வைப்பதை எதிர்க்கவில்லை என்பது இந்துத்துவா அமைப்புகளின் நிலைப்பாடு.

திருவாரூர் போராட்டம்
இதனைத் தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் என டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாஜகவினர் ஒட்டுமொத்தமாக பங்கேற்றனர்.

ஆட்சியர் அலுவலகம் முடங்கும்
திருவாரூர் கண்டனப் பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: திருவாரூர் தெற்கு வீதி ஆசியாவிலேயே புகழ்மிக்க ஆழித் தேர் ஓடக் கூடிய வீதி. மனுநீதிச் சோழன் இந்த மண்ணை ஆண்ட போது மகனை தேர்க்காலில் கொலை செய்து நீதி வழங்கினார். அந்த மனுநீதிச் சோழன் இந்த தெற்கு வீதியில் நடமாடியிருக்கக் கூடும். இத்தகைய பெருமைமிகு தெருவுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டக் கூடாது. மனுநீதிச் சோழன் என்ற பெயரை கூட நீங்கள் மாற்றுங்கள்.. கருணாநிதி பெயரை இந்த வீதிக்கு சூட்டாதீர்கள்..அப்படி சூட்டினால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இயங்க விடாமல் முடக்குவோம்.
தமிழகத்துக்கு நேரும்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையானது இந்தியாவுக்கு வரும் என்கிறார் திருமாவளவன். இலங்கையில் ஒரு குடும்பம் கொள்ளையடித்து சொத்து குவித்தது. அதனால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆகையால் தமிழகத்தை திருமாவளவன் நன்றாகப் பார்க்க வேண்டும். உண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது தமிழகத்துக்குத்தான் வரும். அப்படியான குடும்ப ஆட்சிதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.