பரபரப்பு! ஆளுநர் வரும் முன் தியாகராஜர் கோயிலில் நடந்த சம்பவம்! துரிதமாக செயல்பட்ட போலீஸ்! என்னாச்சு
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆளுநர் வருகைக்கு சில நிமிடங்கள் முன்பு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்டு நிலைமையை போலீசார் கட்டுப்படுத்தினர்.
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் உள்ள 38 மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமாகி விட்டது... அதை மறந்து விடலாம் - குஷ்பு யாரை சொல்கிறார்

கருத்தரங்கம்
இந்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி புதிய கல்விக் கொள்கை குறித்துப் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தேசிய கல்விக் கொள்கை என்பது, பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் கொள்கையாகும். பிரதமரின் பார்வையில் இந்தியா ஒரே பாரதம் உன்ன பாரதம் என்ற இலக்கு உள்ளது. இதற்குத் தேசிய கல்விக் கொள்கை வழி வகுக்கும்.

ஆளுநர் ரவி
கடந்த காலங்களில் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும்போது 40% இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. படிப்படியாக அதனை ஆங்கிலேயர்கள் அழித்தனர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தில் உள்ளீடாகக் கொண்டு செயல்பாட்டில் இருந்த கல்விக் கொள்கையை 75 ஆண்டுகளுக்குப் பிறகு சீர் செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியா என்ற பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு, ஆனால் சமீபகாலமாக வேற்றுமையை வேற்றுமையாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது" என்று பேசியிருந்தார்.

திருவாரூர் தியாகராஜர் கோயில்
இந்த கருத்தரங்கிற்குப் பின்னர், மாலையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றார். அங்கு அவருக்கு ஆலய நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை வழங்கக் கிழக்கு கோபுரத்தில் காத்திருந்தனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு அந்த இடத்தில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருந்தது. ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களும் தமிழ்நாடு போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.

திடீர் பரபரப்பு
அப்போது ஆளுநர் கோயிலுக்கு வரச் சரியாக 10 நிமிடங்களுக்கு முன்னர், கிழக்கு கோபுரத்தின் மேலே இருந்த பெரிய தேன்கூட்டைப் புறாக்கள் கலைத்து விட்டன. இதனால் அங்குத் தேனீக் கூட்டம் திடீரென கிளம்பியது. இதனால் அங்குப் பாதுகாப்பு அங்கிருந்தவர்கள் கலைந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநர் வரும் நேரம் என்பதால் பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் துரிதமாகச் செயல்படத் தொடங்கினார்.

துரித நடவடிக்கை
ஆளுநர் பாதுகாப்பில் சமரசமும் செய்யக் கூடாது' என்பதால் ஆலய நிர்வாகத்திடம் பேசி ஆளுநர் பாதுகாப்புப் படையை வேறு பாதையில் நிற்க போலீசார் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆளுநர் ரவி வேறு பாதையில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேற்கு வாசல் வாயிலாக ஆளுநர் கிளம்பினார். தக்க நேரத்தில் துரிதமாகச் செயல்பட்ட போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.