திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்மாதிரியாகும் திருப்பூர்.. மற்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா?

Google Oneindia Tamil News

திருப்பூர்: மாவட்டத்தில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்ற தகவலை திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் விஜயகார்த்திகேயன் தினமும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இதே வழக்கத்தை மற்ற மாவட்ட ஆட்சி தலைவர்களும் பின்பற்ற வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும்வெளியிட்டு வருகிறது. இந்த வெளியீட்டில் குணம் அடைந்தவர்கள் விவரம், ஆக்டிவ் கேஸ்கள் விவரம், நோய் தொற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்,. மரணம் அடைந்தவர்கள் விவரம் மற்றும் வயது வாரியாக பாதிப்பு, சோதனைகள் எவ்வளவு பேருக்கு நடத்தப்படுகிறது பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

thirupur district collector released daily covid update, Will it be followed in other districts?

ஆனால் மாவட்டத்திற்குள் எங்கு பாதிப்பு என்ற விவரம் வெளியிடப்படுவது கிடையாது. ஆனால் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் எங்கு எத்தனை பேருக்கு பாதிப்பு என்ற விவரத்தை மீடியாக்களுக்கு தெரிவிக்கிறார்கள்.ஆனால் அவை பெரும்பாலும் காலை பத்திரிக்கைகளில் தான் தெரியவருகிறது. சில நேரங்களில் அதுவும் வராது.

இந்நிலையில் மாவட்டத்தில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்ற தகவலை திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் விஜயகார்த்திகேயன் தினமும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். இதே பாணியை கடைபிடித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் கொரோனா பாதிப்பு எங்கு எவ்வளவு என்பதை வெளியட்டால் சிறப்பாக இருக்கும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

34 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. தென் மாவட்டங்களில் கிடுகிடு.. மாவட்ட வாரியான விவரம்34 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. தென் மாவட்டங்களில் கிடுகிடு.. மாவட்ட வாரியான விவரம்

ட்விட்டரில் பல்வேறு மாவட்ட ஆட்சி தலைவர்கள் இல்லை என்பதால் கொரோனா விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவருவதில்லை. எனவே மாவட்டத்திற்குள்ளும் எங்கு எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறது என்ற விவரம் தினசரி வெளியிடப்பட்டால் விழிப்புடன் இருப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

English summary
thirupur district collector Vijayakarthikeyan released daily covid update, Will it be followed in other districts collectors?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X