திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய அரசின் புதிய அறிவிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

Google Oneindia Tamil News

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து திருவாரூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள கிணறுகளை தோண்ட வேண்டும். இதற்கு அப்பகுதி மக்களின் கருத்துகளையும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியையும் பெற வேண்டியது அவசியமாக இருந்தது.

Thiruvarur college students protest against Hydro carbon projects

இதனால் மத்திய அரசு என்னதான் ஹைட்ரோ கார்பன் குறித்த திட்டங்களை அறிவித்தாலும் ஒன்று அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காமல் போகிறது.

இதை உணர்ந்த மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதிய அறிவிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. அதில் ஹைட்ரோகார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.

பலாத்காரம் செய்தார்.. புகார் கொடுத்த பெண்.. விசாரித்தால் விஷயம் வேற.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பலாத்காரம் செய்தார்.. புகார் கொடுத்த பெண்.. விசாரித்தால் விஷயம் வேற.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அது போல் அந்த பகுதி மக்களின் அனுமதியும் கருத்துகளும் பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு விவசாய அமைப்புகளும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து திருவாரூரில் உள்ள திரு.வி.க. கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

English summary
Thiruvarur Thiru Vi Ka College students opposes Centre's new notification on Hydro carbon projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X