திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரம் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை

Google Oneindia Tamil News

திருவாரூர்: அமெரிக்க துணை அதிபராக போட்டியிடுவது நம்ம கோபலன் பேத்தி என்று துளசேந்திரபுரத்தை அடுத்த பைங்காநாடு கிராம மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், தேர்தலில் வெற்றி பெற்று அவர் துணை அதிபராக பொறுப்பேற்க வேண்டி தாய்வழி குல தெய்வ கோவிலான தர்ம சாஸ்தா அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பு குல தெய்வத்தை கும்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த சம்பிரதாயப்படி துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாஹாரிஸ்க்கு குல தெய்வ கோவிலில் வழிபாடு நடைபெற உள்ளது.

கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்த ஊரில் அருகில் உள்ள துளசேந்திரபுரம். இங்குதான் கமலாஹாரிஸ் தாய் வழி தாத்தாவின் குல தெய்வ கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் கடந்த 2014ஆண்டு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ்.

ஊரே கொண்டாடுகிறது.. கமலா ஹாரிஸுக்கு மன்னார்குடியில் கட் அவுட் வைத்த கிராம மக்கள்.. ஏன் தெரியுமா? ஊரே கொண்டாடுகிறது.. கமலா ஹாரிஸுக்கு மன்னார்குடியில் கட் அவுட் வைத்த கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?

கமலா ஹாரிஸ் பூர்வீகம் தமிழ்நாடுதான்

கமலா ஹாரிஸ் பூர்வீகம் தமிழ்நாடுதான்

கமலா ஹாரிஸ் என்ற பெயர் கடந்த சில நாட்களாக அனைவராலும் உச்சரிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை அடுத்த பைங்காநாடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாய்வழி தாத்தா கோபாலன் மற்றும் பாட்டி ராஜம் ஆகியோர் பைங்காநாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவரது இரு மகள்களில் ஒருவரான சியாமளா கோபாலனின் மகள் தான், கமலா ஹாரிஸ்.

தாத்தா குடும்பம்

தாத்தா குடும்பம்

கோபாலன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவில் சர்வீஸ் பணியில் இருந்த போது 1930ஆம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கு எடுக்க, இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின், அமெரிக்காவில் குடியேறினார்.

கிராமத்தினர் பெருமை

கிராமத்தினர் பெருமை

தங்கள் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் பேத்தி மிக உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவதால், துளசேந்திரபுரம் கிராம மக்களும் பைங்காநாடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நம்ம கிராமத்தைச் சேர்ந்த கோபலன் பேத்தி அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் எங்க கிராமமே உலகப்புகழ் பெற்றுவிட்டதாக பெருமைப்படுகின்றனர் கிராம மக்கள். அவர் துணை அதிபராக பதவியேற்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தர்ம சாஸ்தா கோவிலில் கமலா ஹாரிஸ்

தர்ம சாஸ்தா கோவிலில் கமலா ஹாரிஸ்

துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா அய்யனார் கோவில்தான் கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குல தெய்வ கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயரும் இடம்பெற்று உள்ளது.

கமலா ஹாரிஸ் குல தெய்வ வழிபாடு

கமலா ஹாரிஸ் குல தெய்வ வழிபாடு

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் சார்பில் குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குல தெய்வத்தை கும்பிடுவதன் அவசியம்

குல தெய்வத்தை கும்பிடுவதன் அவசியம்

ஆண்களுக்கு ஒரு தெய்வம் குல தெய்வமாக இருக்கலாம். பெண்களுக்கு தந்தை வீட்டு வழியும், கணவர் வீட்டு வழியும் குல தெய்வம் என இரு குல தெய்வங்களாக வணங்கலாம். கமலா ஹாரிஸ் அப்பா வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதால் தனது அம்மா வழி குல தெய்வத்தை தனது குல தெய்வமாக கும்பிடுகிறார். அந்த தர்ம சாஸ்தாவின் அருள் நிச்சயம் அவருக்கு கிடைக்கும் என்கின்றனர் கிராம மக்கள்.

English summary
Kamala Harris, 55, was born Donald Harris, and Shyamala, daughter of P.V. Gopalan, who hails from Painganadu in Tiruvarur district. Thulasendrapuram, near Painganadu, Gopalan’s family had donated funds for the consecration of the Dharmasastha temple. Now special prayer for Kamala Harris success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X