திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு - முதல்வர் பழனிச்சாமி உறுதி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று கடந்த ஜூலை மாதமே மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருவாரூர் : கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி தேர்வுகளும், கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு நடத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஹால்டிக்கெட்களும் வெளியிடப்பட்டு விட்டன.

TN govt demands the cancellation of the NEET Exam says Chief Minister Edappadi Palanisami

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப் பட்டது. அந்த வழக்கை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என உத்தரவிட்டனர். அதே போல, எந்த காரணத்தை கொண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

நீட் தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி தலைமை யார் - பிடி கொடுக்காமல் பேசிய முதல்வர் பழனிச்சாமி சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி தலைமை யார் - பிடி கொடுக்காமல் பேசிய முதல்வர் பழனிச்சாமி

இந்த நிலையில் கடலூரில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் முடியும் வரை நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் பழனிச்சாமி கூறினார்.

பல லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துள்ளதால் தேர்வுகளை எழுத மாணவர்கள் விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றே மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில அமைச்சர்கள், கொரோனா அச்சுறுத்தலால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனுதக்கால் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Recommended Video

    NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக ஒன்றிணையும் முதல்வர்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு

    இந்த நிலையில் இன்று திருவாரூரில் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசும் நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன முதல்வர் பழனிச்சாமி, கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    TN govt demands the cancellation of the NEET Exam says Chief Minister Edappadi Palanisami
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X