"பூப்புனித நீராட்டு".. 2000 பேருக்கு விருந்து! லாரியில் சீர்! அப்பா இறந்து போக.. நெகிழ வைத்த அத்தை!
திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழா ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடப்படுவது வெகுவாக குறைந்து வருகிறது. பெண் ஒருவர் பருவம் அடைவதை கொண்டாடுவது அவ்வளவு நாகரீகமான விஷயம் கிடையாது என்பதால் இந்த வழக்கம் கைவிடப்பட்டு வருகிறது.
சென்னை ஹைகோர்ட்டுக்கு 2 நீதிபதிகள் நியமனம்- மேலும் 2 சிறுபான்மையினரை நியமிக்கும் பரிந்துரை பெண்டிங்
ஒரு சில கிராமங்களில் மட்டுமே இப்போதும் மக்கள் பூப்புனித நீராட்டு விழாக்கள் நடக்கின்றன.

அப்பா இல்லை
இந்த நிலையில்தான் திருவாரூரில் மக்கள் பலரும் வியக்கும் வகையில் பெண் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. திருவாரூர் கீழ வீதியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகள் அட்சயரத்னா. முருகன் கடந்த 2010ஆம் ஆண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கஷ்டம்
இதன் காரணமாக அட்சயரத்னா குடும்பம் பொருளாதார ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டு இருக்கிறது. அதனை அடுத்து மூன்று ஆண்டு காலமாக முருகனை இழந்த துயரத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது. முருகனின் மகள் அட்சயரத்னா கடந்த சில நாட்களுக்கு முன் பருவம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து முருகனின் ஆசைப்படி அவரது உடன்பிறந்த சகோதரிகள் அட்சயரத்னாவிற்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தினர்.

ஏகப்பட்ட
இதனையடுத்து திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முருகனின் ஆசைப்படி 2 ஆயிரம் நபர்களுக்கு உணவளித்து விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 600 சீர்வரிசை தட்டுகளுடன் லாரியில் பல்வேறு சீர்வரிசை வந்துள்ளது. அதேபோல் அலங்கரிக்கப்பட்ட லாரியில் செண்டை மேளங்கள் முழங்க, அந்த சிறுமியை ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். ஊரே வியக்கும் வகையில் சகோதரரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவினை கோலாகலமாக நடத்தி மகிழ்ச்சி அடைந்தார்கள்.

வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இறந்து போன முருகனுக்கு ஆழ்ந்த இரங்கலும், மகளுக்கு வாழ்த்துக்களும், அத்தைகளுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. குடும்பம் ஒன்றாக இல்லாத இந்த காலத்தில் அண்ணன் மகளுக்கு இவ்வளவு பெரிய சீர்வரிசை செய்து விழா எடுத்தது பலரையும் கவர்ந்து உள்ளது. கோலாகலமாக நடந்த இந்த நிகழ்வு திருவாரூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.