திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடா்ந்து, 15 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என சித்தூா் மாவட்ட ஆட்சி தலைவர் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஆந்திராவில் உறுதியானது. ஆந்திராவில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவின் முக்கியமான ஆன்மீக தலமான திருப்பதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூன் 10ஆம் தேதியில் இருந்து பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வின் சிறப்பு ChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வின் சிறப்பு

அர்ச்சகர்களுக்கு கொரோனா

அர்ச்சகர்களுக்கு கொரோனா

அதன் பின்னர் திருப்பதி திருமலையில் பணியாற்றும் 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோயிலின் பெரிய ஜீயர் பாதிப்பு

கோயிலின் பெரிய ஜீயர் பாதிப்பு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சீனிவாச மூர்த்தி (75) என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு (வயது 67) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பதியில் லாக்டவுன்

திருப்பதியில் லாக்டவுன்

திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், சித்தூர் மாவட்டம் முழுவதும் தொற்று அதிகமாக உள்ளது. இதையடுத்து இன்று (ஜூலை 21) முதல் ஆகஸ்ட் 5ம் ததி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூா் மாவட்ட ஆட்சியா் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார். முன்னதாக காளஹஸ்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், அங்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

Recommended Video

    Corona Vaccine உபயோகித்தது எப்படி இருந்தது? தன்னார்வலர் தகவல்
    கடைகளை திறக்கக்கூடாது

    கடைகளை திறக்கக்கூடாது

    திருப்பதில் முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணிவரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மதுந்துக் கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்க வேண்டும்.. அதற்கு பின் பால், மருந்தகங்கள் மட்டுமே திறக்க வேண்டும். திருப்பதி நகர மக்கள் பகல் 11 மணிக்குப் பிறகு வெளியில் நடமாட அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் நாராயண பரத் குப்தா தெரிவித்தார்.

    English summary
    15 days total lockdown in tirupati from today to august 5th due to coronavirrus spread
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X