திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 2.63 லட்சம் பக்தர்கள் - ரூ. 15 கோடி உண்டியல் காணிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் திருப்பதி ஏழுமலையானை ஒரு மாதத்தில் மட்டும் 2லட்சத்து 63 ஆயிரம் பேர் சந்தித்து இருக்கின்றனர். 15 கோடி ரூபாய் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்பதாக தேவஸ்தான இணையதளப்ப

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காலத்திலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.15 கோடியே 80 லட்சம் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. முதலில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 1ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 12500 பக்தர்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுகின்றனர்.

2.63 Devotees dharsan in Tirupathi Balaji Temple

திருப்பதி திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அனைவரும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மேற்கொண்டு பக்தர்கள், ஊழியர்களுக்கு பெரும் தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையானை தரிசிக்க கடைபிடிக்கப்படும் வரிசைகளில் கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. நோய் தொற்று பரவலைப்பற்றிய கவலை ஏதும் இன்றி ஏழுமலையான் மீது பாரத்தை போட்டு விட்டு ஏராளமான பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர்.

உலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா?உலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா?

கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.15 கோடியே 80 லட்சம் கிடைத்தது. லட்சம் பக்தர்களுக்குமேல் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பக்தர்கள் யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் ஜருகண்டி ஜருகண்டி என்ற தொந்தரவு இல்லாமல் நன்றாக சாமி தரிசனம் செய்ய முடிவதாக பக்தர்கள் கூறியுள்ளார்.

English summary
According to the TTD authorities, around 2.63 lakh pilgrims had a darshan of the Lord between June 11 when it was thrown open for pilgrims and till July 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X