திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'

Google Oneindia Tamil News

திருப்பதி: டிவி 5 மற்றும் ஏபிஎன் ஆந்திர ஜோதி ஆகிய 2 பிரபலமான தெலுங்கு செய்தி சேனல்களை, ஆந்திரா முழுவதும் பல கேபிள் டிவி நெட்வொர்க்குகள் நீக்கிவிட்டன. இந்த சேனல்களின் மூத்த நிர்வாகிகள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிதான், இதன் பின்னணியில் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏபிஎன் ஆந்திர ஜோதி மற்றும் டிவி5இன் பிரதிநிதிகள், ஒப்பந்த விதிமுறைகளை மீறியுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய தடை TRAI கேபிள் ஆபரேட்டர்களுக்கான ஒழுங்குமுறையை, மீறும் செயல் என்று சேனல் நிர்வாகங்கள் கூறுகின்றன.

TRAI விதிகளின்படி, கேபிள் ஆபரேட்டர்கள் டிவி சேனல்களின் சிக்னல்களை எடுத்த எடுப்பில் துண்டிக்க முடியாது. 21 நாட்கள் முன்னறிவிப்பையாவது கொடுக்க வேண்டும்.

குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்புகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு

3 அமைச்சர்கள்

3 அமைச்சர்கள்

டிவி 5 இன் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆந்திர மாநில மூன்று அமைச்சர்கள்தான் இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், பெடிரெட்டி ராமச்சந்திர ரெட்டி (பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்), பெர்னி வெங்கடராமையா நானி (போக்குவரத்துத்துறை அமைச்சர்) மற்றும் கோடலி ஸ்ரீ வெங்கடேஸ்வர ராவ், கோடலி நானி (சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்) ஆகியோரைத்தான் அந்த 3 அமைச்சர்கள்.

சட்டசபைக்குள் அனுமதியில்லை

சட்டசபைக்குள் அனுமதியில்லை

கடந்த ஜூலை மாதம் செய்தி சேனல்களான டிவி 5, ஏபிஎன் ஆந்திர ஜோதி மற்றும் ஈடிவி ஆகியவற்றை ஆந்திர மாநில சட்டசபை ஊடக மாடத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, இந்த 3 சேனலின் நிருபர்களும் சட்டமன்ற சட்டசபை கட்டிடத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானா

ஆந்திரா மட்டுமின்றி தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் அரசும், இதுபோன்ற மீடியா சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளது வரலாறு. 2014 ஆம் ஆண்டில், டிவி 9 தெலுங்கு மற்றும் ஏபிஎன் ஆந்திர ஜோதி சேனல்களை தெலுங்கானாவில் மூன்று மாதங்களுக்கு மேலாக தடை விதித்தது அரசு.
அந்த சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட உள்ளடக்கத்தை "மோசமான, மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை" என்று அரசு குற்றம்சாட்டியது.

பொய்கள்

பொய்கள்

இந்த, சேனல்கள் ஏன் கிடைக்கவில்லை என்று மக்கள் கேபிள் ஆபரேட்டர்களிடம் கேட்கும்போது, ​​சேனல்களில் தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாகவும், எனவேதான் ஒளிபரப்ப முடியவில்லை என்றும் அவர்கள் பொய் சொல்கிறார்கள். TRAI விதிகளின்படி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்தால் 72 மணி நேரத்திற்குள் சேனலை ஒளிபரப்பியாக வேண்டும். ஆனால் ஆந்திராவில் மீடியா சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

English summary
2 Telugu news channels TV5 and ABN Andhra Jyothi go off cable networks many says their government behind this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X