திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரேனா - பக்தர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலை செய்யும் ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பதி : திருமலை திருப்பதியில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. முதலில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 1ஆம் தேதி முதல் நாளொன்று 12500 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

50 TTD staff test positive for COVID-19

இந்த நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருப்பதி திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அனைவரும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மேற்கொண்டு பக்தர்கள், ஊழியர்களுக்கு பெரும் தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையானை தரிசிக்க கடைபிடிக்கப்படும் வரிசைகளில் கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

மிகமோசமான உச்சம் - யு.எஸ்-ல் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா! தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபம் மிகமோசமான உச்சம் - யு.எஸ்-ல் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா! தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபம்

உலர் ஓசோன் எனப்படும் கிருமி நாசினி பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றை முழுமையாக அழிக்கும் தன்மை கொண்டது என்பதால் ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைவரின் மீதும் உலர் ஓசோன் தெளிக்கப்படுகிறது. இதேபோல கோவிலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் அனைவருக்குமே தேவஸ்தானம் சார்பில் சத்தான உணவு கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
50 TTD employees have tested positive in the past few days and were shifted to a COVID-19 hospital in Tirupati
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X