திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டிப்பிடிக்கணும்னு போல இருக்கு.. ஆனா கத்துவியே...திருப்பதி தேவஸ்தான பெண்ணிடம் வழிந்த நடிகர்

Google Oneindia Tamil News

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் காதல் பேச்சு பேசிய தொலைக்காட்சி தலைவரும் நடிகருமான பிரித்திவிராஜ் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவின்படி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம், உற்சவங்களை ஒளிபரப்ப கடந்த 2008-ஆம் ஆண்டு 7-ஆம் தேதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டது.

இதன் தலைவராக ஆளும் கட்சியை சேர்ந்தவர் பதவி வகிப்பது வழக்கம். அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பிறகு, தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவிராஜை அந்த தொலைக்காட்சி சேனலின் தலைவராக நியமித்தார்.

காதல் மனைவிக்கு வேலை கேட்ட இங்கிலாந்து இளவரசர்.. அதிர்ச்சி அடைந்த பிரபல இயக்குனர் காதல் மனைவிக்கு வேலை கேட்ட இங்கிலாந்து இளவரசர்.. அதிர்ச்சி அடைந்த பிரபல இயக்குனர்

சுப்பாரெட்டி

சுப்பாரெட்டி

அதைத் தொடர்ந்து அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்ட 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி 30 பேரை டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்தார்.

சுப்பாரெட்டி

சுப்பாரெட்டி

அதைத் தொடர்ந்து அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்ட 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி 30 பேரை டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்தார்.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

பணி நீக்கம் செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவருடன் பிரித்திவிராஜ் பேசிய ஆடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 5 நிமிடம் பேசும் ஆடியோவில் அந்த பெண்ணிடம் நடிகர், நீ என் இதயத்தில் இருக்கிறாய், ஐ லவ் யூ, மது அருந்துவதை நிறுத்திவிட்டேன்.

அச்சத்தால்

அச்சத்தால்

மது அருந்துவது என்றால் அது உன்னுடன் இருக்கும் போதுதான். அலுவலகத்தில் உன்னை கட்டிப்பிடிக்க ஆசையாய் உள்ளது. ஆனால் நீ சப்தம் போட்டுவிடுவாயோ என அச்சத்தால் அப்படி செய்யவில்லை.

பதவியிலிருந்து

பதவியிலிருந்து

இந்த ஆடியோ வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தொலைக்காட்சி தலைவராக பிரித்திவிராஜ் தொடரக் கூடாது. உடனடியாக அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என குற்றம்சாட்டினர்.

ராஜினாமா

ராஜினாமா

டிவி சேனலை வைத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள அன்னமய்யா, கண்டசாலா போல் வேடம் இட்டு பிரம்மோற்சவத்தின் போது பிரித்திவிராஜ் பாட்டு பாடியதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பிரித்திவிராஜ் தனது பதவியை நேற்று மாலை ராஜினாமா செய்தார்.

English summary
Actor and Srivenkateswara TV Channel's President Prithiviraj resigned from his post after his conversation with tv channel lad staff goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X