வக்கிர எண்ணம் படைத்தோருக்கு வலை: பாலியல் வீடியோ பார்த்தவர்களை தட்டி தூக்கிய சிபிஐ!
திருப்பதி: நாடு முழுவதும் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்த 7 பேர் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கைதுசெய்யப்பட்டனர்.
செல்போனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வீடியோக்களை பார்ப்பவர்களின் செல்போன்கள், கம்ப்யூட்டர்களின் ஐ.பி. விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை நாடு முழுவதும் தொடங்கிவிட்டது.
ஊரடங்கு காலத்திலும், இரவிலும், நண்பர்களுடன் ஜாலியாக ரசிக்கவும், ரசித்து ரசித்து பார்த்த இளைஞர்கள் தற்போது சிபிஐ நடவடிக்கையால் அதிர்ந்து போய் உள்ளனர். அதற்குக் காரணம் இந்த வீடியோக்களை அதிகம் பார்ப்பது இளைஞர்கள் பட்டாளம்தான்.
கொஞ்சமாவது மூச்சு விட டைம் கொடுங்க.. போட்டிக்கு பின் உடைத்து பேசிய அஸ்வின்.. என்ன நடந்தது?

திருந்தியவர்கள் பல பேர்
ஆபாச வீடியோக்களை பார்க்கக் கூடாது, பகிரக்கூடாது என நாடு முழுவதும் கடந்த வருடமே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் கொண்ட இந்த நாட்டில் நம்மைத் தேடி வந்து கைது செய்வார்களா என்று அஜாக்கிரதையாக இருந்தவர்கள் பலர். மேலும் அரசின் எச்சரிக்கையால் இதுநாள் வரை அந்த தவறு செய்தவர்கள் தங்களை திருத்திக் கொண்டனர். திருந்தாமல் இருந்தவர்கள் தற்போது சிக்கி வருகின்றனர் என்பதுதான் உண்மை.

அஜாக்கிரதை
கொரோனா வந்தபோது இளைஞர்களை, ஆரோக்கியமானவர்களை தாக்காது என்று குருட்டு நம்பிக்கையுடன் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக இருந்தவர்கள் அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு அநியாயமாக இறந்துவிட்டார்கள். அதே குருட்டு நம்பிக்கையுடன்தான் இப்போதும் ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் போலீசால் நம்மை கண்டுபிடிக்க முடியாது என்று இருக்கின்றனர்.

நாடு முழுவதும் ரெய்டு
இதற்கிடையே செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் நாடு முழுவதும் நேற்று ரெய்டு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அனந்தபூரின் கனேகல் உள்ளிட்ட சுமார் 77 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருப்பதியில் சிக்கினர்
இதில் திருப்பதியில் வசிக்கும் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து குழந்தைகள் பாலியல் வீடியோக்களை பார்த்ததையும், பகிர்ந்து வந்ததை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை அடுத்து கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் மீது 120-8 r/w 67-8 of IT Act, 2000 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச இணையதளங்கள்முடக்கம்
மேலும் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் பார்த்து ரசித்த koflink.com, pdisklink.com உள்ளிட்ட இணையதளங்களில் குழந்தைகள் பாலியல் வீடியோக்கள் இருப்பது கண்டறிந்து அவை முடக்கப்பட்டன. இதபோல் நவம்பர் 14ம் தேதி இதே குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 83 பேர் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.