திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேட்டாக வந்துட்டேன்... மன்னிச்சுக்கங்க.. திருப்பதியில் உருக்கமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

திருப்பதி: நாங்கள் வெறும் தேர்தலில் போட்டியிடும் அரசியலில் ஈடுபடவில்லை என்றும், மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளோம் என்றும் மத்தியில் மக்கள் வலுவான ஆட்சிக்கு வாக்களித்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பதிக்கு இன்று மாலை வருகை தந்தார். அவரை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று வரவேற்றார்.

The aspirations which are rising among people, it is a clear sign of a bright future of our country: PM Modi

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி திருப்பதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், முதலில் உங்க எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இலங்கையின் எனது நிகழ்ச்சிகள் கொஞ்சம் நீளமாகி விட்டது. அதனால் தாமதாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஆந்திர முதல்வராகி உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது சிறந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் ஆந்திராவை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். இந்திய அரசு ஆந்திர மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

கொட்டும் மழைக்கு மத்தியில் கொழும்பு சென்ற மோடி.. குடை பிடித்த சிறிசேனா! கொட்டும் மழைக்கு மத்தியில் கொழும்பு சென்ற மோடி.. குடை பிடித்த சிறிசேனா!

நாங்கள் வெறும் தேர்தலில் போட்டியிடும் அரசியலில் ஈடுபடவில்லை, மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபடுகிறோம். நிறைய எதிர்பார்ப்புகளுடன் மத்தியில் வலுவான ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு இது தெளிவான அறிகுறியாகும்" இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக இலங்கையில் இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி கொழுபு கொச்சிக்கடை தேவலாயத்தில் பலியானோருக்கு மலரஞ்சலி செலுத்தினார் மோடி, அப்போது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களால் இலங்கையின் ஆன்மாவை தோற்கடிக்க முடியாது. இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமைகாக நிற்கிறது என்று குறிப்பிட்டார்.

English summary
Prime Minister Narendra Modi at a public meeting in Tirupati: First of all, I would like to apologise as my programme went a little longer in Sri Lanka, and that's why I got late in reaching here and I want to apologise for it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X