திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அச்சச்சோ... 18 தொகுதிகளில் நோட்டாவுடன் பாஜக போட்டி

Google Oneindia Tamil News

திருப்பதி: தமிழகத்தை தொடர்ந்து, ஆந்திராவிலும் நோட்டாவுடன், பாஜக மீண்டும் போட்டி போட்டுயிருப்பது விமர்சனங்களை கிளப்பி உள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டு நடந்த ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் நின்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதில், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜனை (1,417) விட நோட்டா 956 வாக்குகள் அதிகமாக பெற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,373.

BJP Competition with Nota in 18 constituencies Of Andhra

இதுகுறித்து, சமூக வலைதளங்களில், கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். அதனையும் சிலர், கிண்டலுடன் சவால் விடுத்தனர்.

இந்தநிலையில், 17 வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் 303 இடங்களில் வெற்றி பெற்று, பாரதிய ஜனதாக கட்சி ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களே கிடைத்தது.

பாஜக தனிபெரும்பான்மை பெற்றாலும், ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் பாஜக 1 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக போட்டியிட்ட 24 தொகுதிகளில், 18 தொகுதிகளில் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவான பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது.

மாஸ் காட்டிய தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்... பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி மாஸ் காட்டிய தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்... பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

அனக்காபள்ளி, அனந்தபூர், அரக்கு, திருப்பதி, விழியநகரம் உள்ளிட்ட 18 தொகுதிகளில் வாக்கு சதவீதத்தை குறிப்பிடுகையில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிக பட்சமாக அரக்கு தொகுதியில் 17,867 வாக்குகளை பாஜகவும், 47,977 வாக்குகளை நோட்டாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP Competition with Nota In 18 seats Of Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X