திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டுக் காவலில் வைப்பதால் எங்களை அடக்கிவிட முடியாது.. போராட்டம் தொடரும்.. சந்திரபாபு நாயுடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Andhra EX CM chandrababu naidu house arrest

    திருப்பதி: அத்மகூருக்கு பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து செல்வேன் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் காரில் புறப்பட தயாரான போது போலீஸார் அவரது வீட்டு கேட்டை பூட்டி அவர் வெளியே செல்வதை தடுக்கும் முயற்சியை செய்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் கூறியது தெலுங்கு தேசம் கட்சி. அதுபோல் தன்னையும், தனது மகனையும் தாக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி முயற்சிப்பதாக தெலுங்கு சேதம் குற்றம்சாட்டியது.

    இதை கண்டித்து ஆளும் கட்சியை கண்டித்து இன்று உண்ணாவிரத பேரணிக்கு தெலுங்கு தேசம் திட்டமிட்டது. இந்த நிலையில் பேரணிக்காக சந்திரபாபு நாயுடுவும், நரலோகேஷும் வெளியே வர முயன்றனர்.

    வெளியேற விடாமல் தடுப்பு

    வெளியேற விடாமல் தடுப்பு

    அப்போது அவர்களை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். இந்த நிலையில் தன்னுடைய வீட்டிலிருந்து குண்டூர் மாவட்டத்தில் உள்ள அத்மகூருக்கு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருடன் காரில் புறப்பட சந்திரபாபு நாயுடு தயாரானபோது வீட்டு கேட்டை பூட்டிய போலீஸார் அவரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    அத்மகூர்

    அத்மகூர்

    அப்போது செய்தியாளர்களுக்கு சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நடத்தும் அராஜகம் காரணமாக பாதிக்கப்பட்டு அத்மகூரில் இருந்து வெளியேறி குண்டூரில் நாங்கள் அமைத்துள்ள முகாமில் தங்கி இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு அத்மகூருக்கு சென்றுவிடுவேன்.

    வீட்டிலிருந்து புறப்பாடு

    வீட்டிலிருந்து புறப்பாடு

    பாதிக்கப்பட்ட மக்களை அந்த ஊருக்கு அழைத்து சென்று சொந்த ஊரில் ஆறுதல் கூறுவதற்காக செல்வேன். எங்களுடைய இந்த போராட்டம் தொடரும். போலீசார் எங்களை அனுமதித்த உடன் அத்மகூருக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு செல்வேன்.

    கூலி வேலை

    கூலி வேலை

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் சொந்த ஊரை விட்டு வெளியேறிய விவசாயி ஒருவர் தனக்கு 40 ஏக்கர் சொந்த நிலம் இருந்தும் தற்போது கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். இந்த நிலையை மாற்ற எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    English summary
    Former CM Chandrababu Naidu who is under house arrest says that he will definitely bring the affected people to Athamkoor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X