திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திராயன் 2: யாரும் போகாத இடத்திற்கு போகும் இந்தியா.. உற்றுப் பார்க்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா!

Google Oneindia Tamil News

Recommended Video

    மழை பெய்தாலும் சந்திராயன்-2 விண்ணில் பாயும் - இஸ்ரோ தலைவர்

    திருப்பதி: நிலவை ஆராய்வதற்காக நாளை மறுதினம்சந்திராயன்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

    சந்திராயன்-2 விண்கலமானது விண்வெளித் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது சந்திராயன்-2 திட்டம் வெற்றி பெற பிரார்த்தனை செய்தார்.

    சந்திராயன்-2, விண்கலம் பல வகைகளிலும் சிறப்பானது. இதுபற்றி இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரன்குமார் கூறியதாவது:

    இலங்கை குண்டுவெடிப்பு .. சென்னை உள்பட 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை இலங்கை குண்டுவெடிப்பு .. சென்னை உள்பட 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

    போகாத இடம்

    போகாத இடம்

    தென் துருவத்திற்கு அருகில் சந்திராயன்-2 செல்கிறது. முன்னர் நடந்த ஆய்வுகளை விட வித்தியாசமானது இது. புதிய இடங்களைப் பார்க்கும்போது மட்டுமே வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம். இந்த முறை மற்றவர்கள் போகாத இடத்திற்கு நாம் செல்கிறோம். எனவேதான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்திற்கு நெருக்கமான இடத்தை தேர்வு செய்துள்ளது.

    தெற்கில் ஆய்வு

    தெற்கில் ஆய்வு

    விக்ரம் லேண்டர் விண்கலத்திலிருந்து பிரிந்தவுடன், இன்றுவரை அதிகம் ஆராயப்படாத ஒரு பகுதிக்கு அது செல்லும். பெரும்பாலான விண்கலன்கள், வடக்கு அரைக்கோளத்தில் அல்லது மத்திய ரேகைப் பகுதியில்தான் இதற்கு முன்பு நடந்துள்ளன.

    சீனா, அமெரிக்கா

    சீனா, அமெரிக்கா

    சீனாவின் மிஷன் நிலவின் வடக்குப் பகுதியில் தரையிறங்கியது, அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் லூனாவும் அப்படியே. அப்பல்லோ உட்பட பெரும்பாலான அமெரிக்க சந்திர ஆய்வுகள் சந்திரனின் மத்திய ரேகைப் பகுதியில் இருந்தன.

    வேதியல் தன்மை

    வேதியல் தன்மை

    தரையிறங்கிய பிறகு, இந்திய விண்கலம் நிலவு மண்ணிலுள்ள வேதியியல் தன்மையை பகுப்பாய்வு செய்யும். மற்றும் சந்திரனின் நிலநடுக்கங்களை அளவிடும் பணியை மேற்கொள்ளும்.

    தண்ணீர் உள்ளதா

    தண்ணீர் உள்ளதா

    2009 ஆம் ஆண்டில் சந்திராயன் -1 சந்திரனின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்தது. சந்திரனில் நீர் ஆதாரம் எந்த அளவுக்கு இருக்கிறது என அறிந்த பிறகு, மனிதர்கள் அங்கு குடியேறும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

    English summary
    India's Chandrayaan-2 mission after its lift-off from Sriharikota will head close to the South Pole of the Moon for a soft landing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X