திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வச்ச குறி தப்பாது... மழை பெய்தாலும் சந்திராயன் 2 விண்ணில் பாயும்.. சிவன் பேட்டி

Google Oneindia Tamil News

திருப்பதி: மழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன் 2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் 2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

Chandrayaan 2 will launch early Monday morning despite the rain Says ISRO chief Sivan

மேலும், மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும், மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பிட்ட நேரத்தில் சரியான திசையில் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் என்றும் இரண்டு மாதங்களுக்கு பின் நிலவின் தென்திசையில் சந்திரயான் 2 விண்கலம் லேண்டர் மூலம், பாதிப்பு ஏற்படாத வகையில் மெதுவாக இறங்கும் விதமான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா! பரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா!

ஆயிரம் கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் இந்த விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான செயல்திட்டம் நிறைவுபெற்றுள்ளதாகவும், 2022-க்குள் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

English summary
ISRO chief Sivan has said that the Chandrayaan 2 will launch early Monday morning despite the rain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X