திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி நேரம்.. நடுக்காட்டில் சிறுத்தையிடம் சிக்கி கொண்ட 2 பெண்கள்.. திருப்பதி அருகே!

வனப்பகுதியில் சிறுத்தையிடம் சிக்கி காயமடைந்தனர் இரண்டு பெண்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நடுக்காட்டில் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்ட இரண்டு பெண்கள்

    திருப்பதி: பாவனி,யாமினி.. இவங்க ரெண்டு பேருமே ஒரு புலிக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டாங்க.. அந்த சிறுத்தை இவர்கள் மீது பாய்ந்து குதறியதில், பெரிய காயங்களுடன் உயிர்பிழைத்து ஓடி வந்திருக்கிறார்கள் இந்த இரண்டு பெண்களும்!

    திருப்பதி மலையில் உள்ள பாலாஜி நகர் 2-லைனில் வசிப்பவர்கள்தான் பாவனி, யாமினி என்ற பெண்கள். ரெண்டு பேரும் சொந்தக்காரர்களை பார்த்துவிட்டு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    ஆனால் அது ராத்திரி நேரம்.. வரும் பாதையோ ஒரு காட்டுப்பகுதி.. திருப்பதி மலையை அடையணும்னா எப்படியோ 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போகணும். அதுவரைக்கும் காட்டுப்பகுதியில்தான் வர வேண்டிய நிலைமை!

    பாய்ந்தது

    பாய்ந்தது

    இப்படித்தான் பைக்கில் காட்டு பகுதியில் வந்தபோது, ஒரு சிறுத்தைபுலி அவர்களை பார்த்துவிட்டது. அப்படியே பைக் மீது ஒரே டைவ்வாக அடித்து பாய்ந்தது. ஆனால் ரெண்டு பெண்களும் பயப்படவில்லையே.. உடனே சுதாரித்து கொண்டு, பைக்கை வேகமாக ஓட்ட ஆரம்பித்தனர்.

    ரத்தம் வழிந்தது

    ரத்தம் வழிந்தது

    சிறுத்தை மட்டும் என்ன சும்மா இருக்குமா? பின்னாடியே துரத்தி வந்தது.. பாவனி, யாமினி ரெண்டு பேரின் கால்களிலும் பிராண்டி எடுத்துவிட்டது. இதனால் சிறுத்தை புலி நகம் பட்டு ரத்தமாய் வழிந்தது.. கீறல்களும் காயங்களும் ஏற்பட்டன.

    தாக்குதல்

    தாக்குதல்

    ஆனாலும் பைக்கை இப்படி ஒரு வேகத்தில் இவர்கள் இதுவரைக்கும் ஓட்டியதே இல்லை. மின்னல் வேகத்தில் பறந்து வந்தனர். அதற்குள் அந்த பக்கமாக கார்கள் வரவும், கார்கள் மீது பாய்ந்து ஏறி தாக்குதல் நடத்த முயன்றது அந்த சிறுத்தை. காரில் வந்தவர்களோ.. படு ஸ்பீடில் காரை ஓட்டினார்கள்.

    சிகிச்சை

    சிகிச்சை

    சிறுத்தையின் ஓட்டத்துக்கு பைக்குகளும், கார்களும் ஸ்பீட் எடுத்து டஃப் கொடுத்தன. கடைசியில், திருப்பதி பார்டருக்கு வந்துவிட்ட, யாமினி, பாவனியும், தேவஸ்தானத்திற்கு சொந்தமான அஸ்வினி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ரெண்டு பேரும் சிகிச்சை அளித்தும், அந்த சிறுத்தை தாக்குதலில் இருந்து மீள முடியாமல் ஷாக்-கில் உறைந்து உள்ளனர்!

    English summary
    Two Young women attacked severely by Cheetah near Tiruati Forest Area
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X