திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஎம்எஸ்-1 செயற்கைக் கோளுடன் பறக்கப்போகும் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் - ஏழுமலையானிடம் விஞ்ஞானிகள் ஆசி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சுவாமி தரிசனம் செய்து செயற்கைக்கோள் மாதிரியை வைத்து வணங்கி ஆசி பெற்றனர்.

Google Oneindia Tamil News

திருப்பதி: பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். செயற்கைக்கோள் மாதிரியை சுவாமி பாதத்தில் வைத்து ஆசி பெற்றனர்.

Recommended Video

    நாளை விண்ணில் பறக்கும் சிஎம்எஸ்-1 சாட்டிலைட்: இஸ்ரோ குழுவினர் சுவாமி தரிசனம்!

    தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் இதுவரை 41 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில் 2011ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக் கோள்ஆயுட்காலம் தற்போது முடிந்துவிட்டது.

    CMS-1 satellite : ISRO scientists visited the Tirupati Ezhumalayan Temple

    அதற்கு மாற்றாக அதிநவீன சிஎம்எஸ்-1 (ஜிசாட்-12ஆர்) செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக் கோள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி50 ராக்கெட் மூலம் நாளை மாலை 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

    எரிபொருள் நிரப்புதல் உட்பட ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்-டவுன் இன்று தொடங்கியது. இதையடுத்து இஸ்ரோ குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சென்று இன்று சாமி தரிசனம் செய்தனர். செயற்கைக்கோள் மாதிரியை ஏழுமலையான் பாதத்தில் வைத்து விஞ்ஞானிகள் ஆசி பெற்றனர்.

    சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் சுமார் 1,400 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் அலைக்கற்றைகள் இந்திய நிலப்பரப்பு பகுதிகளுடன், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் வரை தற்போது உள்ள தொலைதொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்க உதவும். அதனுடன் தொலை மருத்துவம், இணையவழிக் கல்வி, பேரிடர் கண்காணிப்பு மற்றும் செல்போன் சேவைக்கு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    English summary
    The CMS-1 satellite is scheduled to be launched tomorrow by the PSLV-C50 rocket. ISRO scientists today visited the Tirupati Ezhumalayan Temple. Swami placed the satellite model at his feet and was blessed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X