திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பக்தர்களுக்கு ஓர் அறிவிப்பு... திருப்பதியில் 27-ம் தேதி நான்கரை மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

Google Oneindia Tamil News

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், வருகிற 27 ம் தேதி நான்கரை மணி நேரம் சுவாமி தரிசனத்திற்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு 4 மணி நேரமும், பாத யாத்திரையாக சென்று திவ்ய தரிசனம் செய்ய ஆறு மணி நேரமும் ஆவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Four and a half hour stop Darshan on the 27th day In Tirupati Temple , Devasthanam announcement

தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால், பெரும்பாலான பக்தர்கள் பூங்காக்களில் தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. கூட்டநெரிசலை தவிரக்க, திருமலை முழுவதும் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யுமாறு பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாவம் செய்து விட்டார் டாக்டர் ராமதாஸ்.. அதிலிருந்து அவரால் விடுபடவே முடியாது.. கே.எஸ்.அழகிரி சாபம்பாவம் செய்து விட்டார் டாக்டர் ராமதாஸ்.. அதிலிருந்து அவரால் விடுபடவே முடியாது.. கே.எஸ்.அழகிரி சாபம்

இந்தநிலையில், திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு கூறுகையில்: திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கியுள்ளது.

வருகிறது 27ம் தேதி காலை 11 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் 27ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மேலும், கோடைகால விடுமுறையை கருத்தில்கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் விஐபி தரிசனம் வழங்கப்படும் என்றார்.

English summary
Tirupati Temple Devasthanam announcement that Four and a half hour stop Darshan on the 27th day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X