திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழுமலையானை தரிசிக்க...வெளிமாநில பக்தர்களுக்கு...இன்று நள்ளிரவு முதல்... இலவச டிக்கெட் விநியோகம்!

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்வழங்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இன்று டிக்கெட் பெரும் பக்தர்கள் 4-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Free Darshan tickets for outstation devotees in Tirupati from midnight today

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிகாக 25-ம் தேதி முதல் முதல் வரும் ஜனவரி 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. ரூ.300 தரிசன டிக்கெட்கள் பெற்ற பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக திருப்பதி பக்தர்களுக்கு ,இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பிற மாவட்ட பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.

இங்கிலாந்து போறீங்களா... 6-ம் தேதி முதல் விமானங்கள் மீண்டும் இயக்கம்... ஆனால் சில கட்டுப்பாடுகள்!இங்கிலாந்து போறீங்களா... 6-ம் தேதி முதல் விமானங்கள் மீண்டும் இயக்கம்... ஆனால் சில கட்டுப்பாடுகள்!

இந்த நிலையில் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கூறுகையில், ஏழுமலையானை தரிசிக்க வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்வழங்கப்படும்.

பூதேவி காம்பளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஓய்வு அறையில் டிக்கெட் வழங்கப்படும். இன்று டிக்கெட் பெரும் பக்தர்கள் 4-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

English summary
Thirumalai-Tirupati Devasthanam has announced that free darshan tickets will be issued to outstation and outstation devotees to visit Tirupati Ezhumalayana from 12 midnight today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X