திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்... நாளை முதல்வராக பதவியேற்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jagan mohan Reddy: ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்- வீடியோ

    திருப்பதி: ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள ஜெகன்மோகன்ரெட்டி இன்று குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

    தேர்தலில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தார். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

    Jaganmohan Reddy offered prayers at Venkateswara Temple in Tirupati

    ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் தொடங்க உள்ளது.

    முன்னதாக, முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி ஏழுமலையான் பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். ஜெகன்மோகன் ரெட்டியின் கையில் மஞ்சள் கயிறு கட்டினர். முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள தீவிரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதில் அரசுக்கு இல்லை.. குமுறும் மக்கள் 8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள தீவிரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதில் அரசுக்கு இல்லை.. குமுறும் மக்கள்

    இதே போல், நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று தரிசனம் செய்தார்.

    English summary
    YSRCP Chief and Andhra Pradesh CM designate Jaganmohan Reddy offered prayers at Venkateswara Temple in Tirupati
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X