திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு வருகிறது... முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

Google Oneindia Tamil News

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள, 175 தொகுதிகளில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

liquor exemption In Andhra Pradesh, Chief Minister Jaganmohan Reddy has taken action

இதனை தொடர்ந்து, கடந்த 30 ம் தேதி விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. மைதானத்தில் சுமார் 40, 000 அதிகமானோர் திரண்டிருந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்துக்கு இடையே ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். விழாவில் ஜெகன்மோகன் தவிர்த்து வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. அமைச்சரவை உறுப்பினர்கள் ஜுன் 8-ம் தேதி பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஜெகன் மோகன், 1,000 ரூபாயாக இருந்த முதியோர் ஓய்வூதியத்தை 2, 250 ரூபாயாக உயர்த்தும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். இந்த தொகை அடுத்த ஆண்டில் 2,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் அட்டூழியம்.. பாதுகாப்பு படை மீது கொடூர தாக்குதல்.. ஒருவர் வீர மரணம் ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் அட்டூழியம்.. பாதுகாப்பு படை மீது கொடூர தாக்குதல்.. ஒருவர் வீர மரணம்

இந்தநிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையை முதல்வரிடம், அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.

அப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மதுபழக்கம் அதிகரிப்பதை தடுக்க ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறினார்.

மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை முதலில் அகற்றுவது, பிறகு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது, பின்னர் நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுவை அனுமதிப்பது என படிப்படியாக பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் தெரிகிறது. இதே போல், தமிழகத்தில் அதிமுக ஆட்சி கைப்பற்றிய போது, பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Jaganmohan Reddy has taken action on the issue of liquor exemption in Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X