திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆந்திரா: ஜெகனுக்கு அரியாசனத்தைப் பெற்றுக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்து அரியாசனத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் அரசியல் வியூகங்களை மேற்கொள்ளும் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றினார்.

குஜராத்தில் மோடி மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றதில் தொடங்கி ஒவ்வொரு தேர்தல் களத்திலும் பிரசாந்த் கிஷோரின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பீகார் லாலுவின் ஆர்ஜேடியையும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தையும் கூட்டணி அமைக்க வைத்து பாஜகவின் வெற்றிக் கனவை தகர்த்ததும் பிரசாந்த் கிஷோர்தான்.

பின்னர் இரு கட்சிகளையும் இணைத்துவிட்டால் பாஜகவால் ஒன்றுமே செய்ய முடியாது என ஆலோசனை கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். ஆனால் அது நடைபெறவில்லை.

மொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி? மொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி?

முதல்வர் வேட்பாளர் பிரியங்கா

முதல்வர் வேட்பாளர் பிரியங்கா

அதேபோல உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை முன்னிறுத்தும் யோசனையை முன்வைத்ததும் பிரசாந்த் கிஷோர்தான். ஆனால் அதை காங்கிரஸ் ஏற்கவில்லை.

பஞ்சாப்- மீண்டும் காங்கிரஸ்

பஞ்சாப்- மீண்டும் காங்கிரஸ்

பஞ்சாப்பில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தால்தான். கடந்த சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவிய ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியது.

முழுமையான சீரமைப்பு

முழுமையான சீரமைப்பு

இதையடுத்து ஜெகன் கட்சியின் பலவீனங்களை பிரசாந்த் கிஷோர் குழு முழுமையாக ஆராய்ந்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி கீழ்நிலையில் இருந்தாவது ஒவ்வொரு பூத் கமிட்டியில் இருந்து கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

ஈர்க்கும் முழக்கங்கள்

ஈர்க்கும் முழக்கங்கள்

இதுதான் இந்த தேர்தலில் அமோக வெற்றிக்கும் அடித்தளமிட்டது. அதேபோல் மக்களை ஈர்க்கும் முழக்கங்களையும் ஜெகன் கட்சிக்கு பரிந்துரைத்ததும் கிஷோர் டீம். தெலுங்குதேசம் அதற்கு பதிலடி கொடுத்த போதும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prashant Kishor and his team had proved their mastery again with the Jagan Mohan in Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X