திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் பத்தி பேச கமல்ஹாசன் ஒன்றும் பொருளாதார மேதை கிடையாது.. ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

திருப்பதி: பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசன் ஒன்றும் பொருளாதார மேதை கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

திருப்பதியில் இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். ரங்கநாதர் மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர்.

பின்னர் கோயிலுக்கு வெளியே அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இன்றைய பொருளாதார நிலவரப்படி மக்களை பாதிக்காத வகையில் பட்ஜெட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இனிமேல்தான் சிக்கலே.. வருமான வரி செலுத்துவதில் ஏற்பட போகும் குழப்பங்கள்.. என்ன பிரச்சனை?இனிமேல்தான் சிக்கலே.. வருமான வரி செலுத்துவதில் ஏற்பட போகும் குழப்பங்கள்.. என்ன பிரச்சனை?

32 ஆண்டுகள்

32 ஆண்டுகள்

மத்திய அரசு எதை செய்தாலும் அதை சில கட்சிகள் எதிர்ப்பதற்காக எதையாவது செய்கின்றன. இந்த பட்ஜெட்டிற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பட்ஜெட் குறித்து பேசுவதற்கு கமல்ஹாசன் ஒன்றும் பொருளாதார மேடை கிடையாது. 32 ஆண்டுகள் அரசியலில் ஆட்சி செய்து வரக் கூடிய கட்சி அதிமுக ஆகும்.

திருக்குறள்

திருக்குறள்

இன்று ஆளும் கட்சி மக்களால் மக்களுக்காக ஆட்சி செய்யும் கட்சியாகிவிட்டது. எனவே மக்கள் மீதான அக்கறை மத்திய, மாநில கட்சிகளை காட்டிலும் கமல்ஹாசனுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. நிர்மலா சீதாராமன் தமிழ் மகள் என்ற உணர்வுடன் திருக்குறளையும் ஆத்திச்சூடியையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

மோடி

மோடி

தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழதத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கிய பிரதமர் மோடி அமெரிக்காவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பேசினார். தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதற்காகவே சீன அதிபரை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பாலில் கலப்படம் குறித்து நான்தான் ஏற்கெனவே கருத்து தெரிவித்துவிட்டேன்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக உள்ள கட்சியாகத் திமுகவை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். உள்ளாட்சி தேர்தல்கள் மூலம் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துவிட்டது. சசிகலா வெளியே வந்த பிறகு அவர் குறித்து ஆலோசனை செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

English summary
Minister Rajendra Balaji says that Kamal Haasan is not Economist to say about Budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X