திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோசமான வானிலை.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.. நூலிழையில் தப்பிய தமிழக நகைக் கடைக்காரர் குடும்பம்

Google Oneindia Tamil News

சித்தூர்: கோவையிலிருந்து திருமலை திருப்பதிக்கு சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியதில் அதில் பயணம் செய்த தமிழக நகைக்கடைக்காரர் குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலிருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது.

Tamilnadu Jewellery family escapes from tragedy as the helicopters emergency landing

அந்த ஹெலிகாப்டரில் இரு விமானிகள் உள்பட 7 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை மேலும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து திருப்பத்தூர்- குப்பம் எல்லையில் அந்த விமானத்தை தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

அதன்படி திருப்பதியில் உள்ள நாங்கிலியில் வயல்வெளியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் தமிழக நகைக்கடைக்காரர் அதில் பயணம் செய்ததும் அவர் நூலிழையில் விபத்து ஏற்படாமல் உயிர் தப்பியதும் தெரியவந்தது.

ஆக்ரோஷ துர்கை சரி.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கையை பாருங்கள்!ஆக்ரோஷ துர்கை சரி.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கையை பாருங்கள்!

வயலில் விமானம் இறங்கியிருப்பதை அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று கூடினர். இதையடுத்து திருப்பதி போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வானிலை சீரானதும் அந்த ஹெலிகாப்டர் திருப்பதிக்கு சென்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று மோசமான வானிலையால் தரையிறங்கிய போது சறுக்கிக் கொண்டு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu Jewellery family escapes from Tragedy as the helicopter's emergency landing due to bad weather.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X