திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி!

Google Oneindia Tamil News

- கோயா

சென்னை: எல்லாம் நல்லா போய்ட்டிருக்கு. எதிர்காலத்தில் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு மேலும் உதவிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று திருப்பதி கோவிலில் வைத்து பாஜகவுக்கு ஆதரவாக மணக்க மணக்க நாலு வார்த்தை பேசியுள்ளார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை.

பாஜக அரசையும், குறிப்பாக பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருபவர் தம்பிதுரை. அதிமுகவில் இவர் மட்டும் தனித்து போர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் அதிமுக தலைவர்களே கூட கடுப்பாக உள்ளனர். இவர் மட்டும் என்ன தனியாக சவண்டு விடுகிறார் என்று.

இந்த நிலையில் திடீரென சமீப காலமாக சாப்ட்டாக பேச ஆரம்பித்துள்ளார் தம்பிதுரை. அதிலும் திருப்பதிக்கு அவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்த பிறகு ரொம்பவே சாப்ட்டாகி விட்டார்.

தம்பிதுரை திருப்பதியில்

தம்பிதுரை திருப்பதியில்


திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ரயில்வே அமைச்சர் கோயல் ஆகியோர் நேற்று மாலை திருமலைக்கு மலைக்கு வந்தனர். இன்று காலை அபிஷேக சேவையில் கலந்துகொண்டு இருவரும் ஏழுமலையானை தரிசித்தனர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தம்பிதுரை.

மக்களுக்கு நல்லது நடக்கட்டும்

மக்களுக்கு நல்லது நடக்கட்டும்

சாமி தரிசனத்திற்காக இங்கு குடும்பத்துடன் வந்த நான் இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும் நன்மைகள் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டி கொண்டேன். பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

எதிர்கால நலன் கருதி

எதிர்கால நலன் கருதி

தமிழ் நாட்டின் எதிர்கால நலன் கருதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதிமுக ஏற்படுத்தியிருக்கும் கூட்டணியின் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மத்திய அரசின் உதவி

மத்திய அரசின் உதவி

இதனால் மத்தியில் சாதகமான அரசு ஏற்பட்டு தமிழகத்துக்கு தேவையான நிதி உதவிகள் தாராளமாக கிடைக்க உள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்தி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

திருப்பதிக்கு வந்தா திருப்பம் என்பார்கள்.. தம்பிதுரையே அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.

English summary
LS deputy speaker Thambidurai is elated over the ADMK and BJP alliance and said that the centre will help TN more in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X