ஏழுமலையானை தரிசிக்க பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களே...ஸ்ரீவாரி மெட்டு பாதை ரெடி
திருப்பதி: திருமலைக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி திறந்து வைத்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நம் முன்னோர்கள் நடை பயணமாக செல்லும் வகையில் 2 பாதைகளை உருவாக்கினர். வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கடந்த நூற்றாண்டில் மேலும் இரு மலைப்பாதைகள் உருவாக்கப்பட்டன. இந்த வாகனப் பாதைகள் உருவான பின்னர் பக்தர்களின் வருகை லட்சக் கணக்கில் உயர்ந்துள்ளது. அற்புத இயற்கை சூழலில் அமைந்துள்ள அனைத்து பாதைகள் வழியாகவும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா முதல்வராக பிராமணர் வர வேண்டும்! மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பரபர பேச்சு
1970ஆம் ஆண்டு வரை ஏழுமலையானை பக்தர்கள் வெறும் 10 நிமிடத்தில் தரிசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாகனப் பாதைகள் ஏற்பட்ட பின் பக்தர்களின் வருகை லட்சக் கணக்கை எட்டி உள்ளது. தற்போது தினமும் கார், ஜீப், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், நடை பயணமாகவும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.