திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

Google Oneindia Tamil News

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி, இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார். மாலத்தீவு, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி திருப்பதி வருகை தந்தார். இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Tirupati: Prime Minister Narendra Modi offer prayers to Lord Venkateshwara at Tirumala temple

இதனைத் தொடர்ந்து, ரேணிகுண்டாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும் என்றார். மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எல்லா உதவியும் செய்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் திருப்பதி வருகையால், திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் வருகையால் திருமலை பகுதி நிரம்பி வழிந்தது.

இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிமீ. வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் நேற்றிரவு அறை கிடைக்காமல் கோயிலின் எதிரே ஆங்காங்கே இரவு படுத்து தூங்கினர்.

இன்று மாலை பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய வந்ததையொட்டி, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. பிரதமர் வருகையால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார். பிரதமர் மோடிக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பிரதமராக மோடி 2 வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலை வலம் வந்த மோடி, பின்னர் தாமரைப்பூக்களை கொண்டு துலாபாரம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tirupati: Prime Minister Narendra Modi & Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy offer prayers to Lord Venkateshwara at Tirumala temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X