திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருகிட்ட...திருப்பதியில் சசிகலா புஷ்பாவின் செல்போனை பறித்து ஊழியர்கள் அடாவடி- மன்னிப்பு கேட்டு சரண்

Google Oneindia Tamil News

திருப்பதி: பாஜகவில் அண்மையில் இணைந்த சசிகலா புஷ்பாவிடம் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போனை மன்னிப்பு கேட்டு திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

அதிமுகவின் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பாவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா, திடீரென பாஜகவில் ஐக்கியமானார்.

Tirupati Staffs Allegedly Misbehaved With Sasikala Pushpa?

தமிழக பாஜக தலைவராக சசிகலா புஷ்பா நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதிக்கு சசிகலா புஷ்பா சென்றிருந்தார். அப்போது அலிபிரி சோதனைச் சாவடியில் நேற்று மாலை தேவஸ்தான விஜிலென்ஸ் பிரிவு ஊழியர்கள் சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

இதை அவரது செல்போனில், உடன் வந்த பாதுகாவலர் ஒருவர் படம்பிடித்திருக்கிறார். இதில் மேலும் கோபமடைந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், சசிகலா புஷ்பாவின் செல்போனை பறித்துக் கொண்டனர். இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்திடம் சசிகலா புஷ்பா புகார் செய்தார்.

இது வேற லெவல்.. இது வேற லெவல்.. "தமிழகத்தின் ஜான்சி ராணி.. சிங்க பெண்" பாராட்டுக்களை வாரி குவித்த சசிகலா புஷ்பா

இதன் பின்னர் செல்போனை திரும்ப ஒப்படைத்த தேவஸ்தான ஊழியர்கள் அவரிடம் மன்னிப்பும் கேட்டனர். இன்று திருப்பதியில் வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, சி.ஏ.ஏ.-ன் தேவை குறித்து விவரித்தார். மேலும் சி.ஏ.ஏ.வால் நாட்டின் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விளக்கம் அளித்தார்.

அப்போது தேவஸ்தான ஊழியர்களின் நடவடிக்கைகள் குறித்து சசிகலா புஷ்பாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு பதிலளிக்க மறுத்த சசிகலா புஷ்பா, தாம் திருப்பதியில் வழிபாடு நடத்த வந்ததாக மட்டுமே தெரிவித்துவிட்டு பிரச்சனை குறித்து பதிலளிக்கவில்லை.

English summary
Sources said that Tirupati Staffs Allegedly Misbehaved With Sasikala Pushpa who recently joined BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X