திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பதி கோயிலில் சிலுவையா.. உறைந்து போன பக்தர்கள்.. சிக்கிய நபரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

திருப்பதி கோயில் அலங்கார விளக்கு குறித்து சர்ச்சையாக பதிவிட்டவர் கைதானார்

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர விளக்குகள் சிலுவை வடிவில் இருப்பதாக ஒருத்தர் சொல்லிவிட்டார்... கடைசியில் அவரை ஸ்டேஷனில் தூக்கி உட்கார வைத்துவிட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடப்பது வழக்கம்... இதுபோன்ற உற்சவங்களின்போது, கோயில் கோபுரங்களை சுற்றி லைட்டுகள் வைத்து அலங்கரிப்பார்கள்.. அதுபோன்று அலங்கரிக்கப்படும் லைட்டுகளில் அனுமன், கருடன், பூரண கும்ப கலசம் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்படுவதும் வழக்கம்.

Tirupati Temple Christianity symbol controversial and arrest one

அப்படித்தான், இந்த வருட வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் கோபுரத்தை சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. பூரண கும்பத்தை போன்றும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. ஆனால், இந்த அலங்காரம் சிலுவை போல இருப்பதாக சிலர் சொல்லி உள்ளனர்.

"தால பத்ரா நிதி" என்ற நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பூரண கும்ப கலசம் என்று கூறி, சிலுவையை மின் அலங்காரம் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.. அத்துடன், அந்த போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளனர். இந்த பதிவுதான் படுவைரலாகி, கடைசியில் சர்ச்சையாகவும் மாறிவிட்டது. பக்தர்களிடையேயும் அதிர்ச்சி நிலவியது.

திருப்பதி வைகுண்ட ஏகாதசி - ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய போட்டா போட்டி திருப்பதி வைகுண்ட ஏகாதசி - ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய போட்டா போட்டி

தவறாக சித்தரிக்கப்பட்ட இந்த போட்டோவுடன் கூடிய பதிவு, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும், புனிதமான கோவிலில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் பக்தர்களிடையே வீண் புரளியை கிளப்பி வருவதாகவும், தேவஸ்தான அதிகாரிகள் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசாரும் பூரண கும்ப கலசத்தை சிலுவையாக இருப்பதாக கூறி, தாலா பத்ரா நிதி பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

English summary
Tirupati Temple Christianity symbol controversial and arrest one
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X