திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்.. இன்று முதல் டோக்கன்.. தினசரி 3000 பேருக்கு அனுமதி

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனம் நடைமுறைக்கான டோக்கன் வினியோகம் துவங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தினசரி அதிகபட்சமாக 3,000 பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் காலை 5 மணி முதல் டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Tirupati Tirumala Devasthanam allowing devotees for free from today

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்று நடைபெற்றிருந்தது. நேற்று பிரம்மோற்சவ விழா நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து ஜூன் 11 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பின்னர் இந்த நடைமுறையை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Tirumala Tirupati Devasthanam allowing devotees to the Temple from today. Maximum 3000 devotees will be allowed to enter the Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X