திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்ப

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோயில் உலக பிரசித்த பெற்றது. உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாட்டில் பொது முடக்கம் முதன் முறையாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும், சாமிக்கு பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நாட்டில் சிறிய தளர்வுகளுடன் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 8ஆம் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. முதல் 2 நாட்கள் உள்ளூர் மக்கள், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னர், ஜூன் 10ஆம் தேதியில் இருந்து பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயில்களில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

 திருச்சியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள்! திருச்சியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள்!

ஊழியர்களுக்கு கொரோனா

ஊழியர்களுக்கு கொரோனா

இதைத் தொடர்ந்து 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

அர்ச்சகர் உயிரிழப்பு

அர்ச்சகர் உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சீனிவாச மூர்த்தி (75). இவருக்கு மருத்துவமனியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவர் உயிரிழந்து இருக்கிறார். ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நிலை சீரான ஜீயர்

உடல்நிலை சீரான ஜீயர்

மேலும், கோயிலின் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு (வயது 67) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருப்பதியில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொற்று

தொற்று

கோயிலில் பெரிய அளவில் தொற்று ஏற்பட்டு இருப்பதால், பக்தர்கள் கோயில் தரிசனத்துக்கு வரலாமா? கூடாதா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து ஆந்திர மாநில அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

English summary
Tirupati Venkateswara temple priest died for Coronavirus more priests are getting treatment in the hospital including jeeyar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X