• search
திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"சூட்கேஸில்" மனைவி.. கையில் குழந்தையுடன் தரதரவென இழுத்து.. புதருக்குள் சென்று.. திகில் திருப்பதி

Google Oneindia Tamil News

திருப்பதி: "மனைவிக்கு டெல்டா வைரஸ் வந்துவிட்டது.. அதனால் அவர் இறந்துவிட்டார்.. அப்படி இறந்தவரை ஆஸ்பத்திரியே தீ வைத்து எரித்துவிட்டது" என்று அடுக்கடுக்காக பொய்களை சொன்ன கணவனை போலீசார் தட்டி தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு பின்பக்கம் ஒரு காட்டுப்பகுதி உள்ளது.. மரங்களும், புதர்களும் நிறைந்த இந்த பகுதியில், முற்றிலும் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், சடலத்தை பார்வையிட்டனர்.. ஆனால், அது ஆணா, பெண்ணா என்றே தெரியாத அளவுக்கு கருகி கிடந்தது..

தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா நுழைந்தது எப்போது ?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா நுழைந்தது எப்போது ?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ஆய்வு

ஆய்வு

பிறகு, பிணம் இருந்த இடத்தை சுற்றி நடத்திய ஆய்வில், தலைமுடியை கைப்பற்றினர்.. அப்போதுதான், எரிந்த சடலம் பெண் என்றே யூகிக்க முடிந்தது.. இதையடுத்து அந்த பகுதியில் காணாமல் போன பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர்.

 விசாரணை

விசாரணை

அப்போதுதான், புங்கனூர் அடுத்த ராமசாமுத்திரம் பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்த டெச்சி புவனேஸ்வரி என்ற பெண்ணை 2 நாளாக காணவில்லை என்று தெரியவந்தது.. அவருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில், ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோதுதான், புவனேஸ்வரியின் கணவர் ஸ்ரீகாந்த், ஒரு சூட்கேஸை கொண்டு சென்றது தெரியவந்தது.

கொலை

கொலை

மனைவியை இவரேதான் கொன்றுள்ளார்.. துண்டு துண்டாக உடம்பை வெட்டி, சூட்கேஸில் போட்டு எடுத்து சென்று, ஆஸ்பத்திரிக்கு பின்பக்கம் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து, சடலத்தை எரித்தும் உள்ளார்.. இதையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த்தை கைது செய்தனர்... இதை பார்த்து சொந்தக்காரர்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்..

பொய்

பொய்

காரணம், புவனேஸ்வரியை காணோம் என்று இவர்கள் எல்லாரும் சேர்ந்து ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார்கள்.. இதை கேள்விப்பட்ட ஸ்ரீகாந்த், டெல்டா வைரஸ் வந்து புவனேஸ்வரி இறந்துவிட்டதால், அவரது உடலை கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே எரித்துவிட்டது, அதனால், அவரை தேடாதீங்க என்று சொல்லி, உறவினர்களிடம் நம்ப வைத்தாராம்.

 விசாரணை

விசாரணை

இப்போது விசாரணையின் பிடியில் ஸ்ரீகாந்த் உள்ளார்.. சடலத்தை கண்டெடுத்ததில் இருந்து, இந்த கொலையில் எந்த க்ளூவும் கிடைக்காமல் போலீசார் ஆரம்பத்தில் குழம்பி விட்டனர்.. கிட்டத்தட்ட 5 நாட்கள் கழித்து மர்மங்கள் வெளியே வந்துள்ளன.. புவனேஷ்வரி ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியராம்.. வேலை பார்த்து வந்துள்ளனர்.. இவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள்.. கல்யாணமாகி இரண்டரை வருடம்தான் ஆகிறது.. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது..

குழந்தை

குழந்தை

மனைவியை ஸ்ரீகாந்த் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்... அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காரில் வைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளார்... அதன்பிறகுதான் அந்த பகுதியில் வைத்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சென்றுள்ளார்.. இதில் கொடுமை என்னவென்றால், இந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது ஒன்றரை வயது குழந்தையை உடன் வைத்துக்கொண்டே ஸ்ரீகாந்த் செய்துள்ளார்.. ஒருகையில் குழந்தை, இன்னொரு கையில், சூட்கேஸ், அதாவது சடலத்தை இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிதான் முக்கிய ஆதாரமாக இந்த வழக்கில் இருந்துள்ளது..!

English summary
Tirupati young woman murder case and husband played Covid19 drama
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X